பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17-ஆவது அதிகாரம் கலியானப் பைத்தியம்

கிலாம்பாள் வீழ்ந்தது பெரிய துறவு கிணறு. தோட்டக் காரர்கள் பகல் வேளை முழுதும் ; ஏற்றங்களின் மூலமாய் அந்த பங்களாவிலிருந்த % பல கிணறுகளிலிருந்தும் தண்ணிர் இறைப்பது இ வழக்கம், சாயுங்கால வேளையில் தண்ணிர்

வற்றிப்போய் இரவிற்குள் மறுபடி பெருகி நிறைந்திருப்பது வழக்கம். ஆனால், அவள் எந்தக் கிணற்றிற் குதித்தாளோ, அந்தக் கிணற்றில் ஊற்றுக் கண்கள் அவ்வளவு நன்றாக இருக்கவில்லை. ஆதலால், அதில் அவ்வளவு விரைவாகத் தண்ணிர் ஊறுவதில்லை. ஆகவே, தோட்டக் காரர்கள் அதிலிருந்து தண்ணர் இறைப்பதே இல்லை. அந்தக் கிணற்றில் ஒர் ஆளின் கழுத்தளவு வரக்கூடிய தண்ணிர் எப்போதும் தேங்கி இருக்கும். தோட்டக்காரர்கள் அந்தக் கிணற்றை ஒருவிதமாய் உபயோகித்து வந்தனர். அந்தப் பூஞ்சோலையைச் சுற்றிலும் பெரிய காடுபோல வளர்ந்திருந்த ரயில் கற்றாழை மடல்களை ஏராளமாக வெட்டி அவைகளி லிருக்கும் முட்களைப் போக்கி, கல்லினால் நன்றாக நசுக்கிக் கட்டுகளாய்க் கட்டி அந்தக் கிணற்றில் போட்டு வைப்பது வழக்கம். அவற்றிலிருந்து எடுக்கப்படும் நார் நிரம்பவும் அழுத்த மாகவும் பட்டுபோல வழுவழுப்பாகவும் இருக்கும். ஆகையால், அந்த நார் பலவகையான காரியங்களுக்கு உபயோகப்படுத்தப் பட்டது. அந்த நாரை எளிதில் உரிக்கும் பொருட்டு, தாழைகளை அவர்கள் அந்தக் கிணற்றில் அழுகப்போட்டு வைத்திருந்தனர். கட்டுகள் மேலே மிதக்காமலிருக்கும்பொருட்டு, தண்ணிருக்குள் ஒரு முழ ஆழத்தில் நாற்புறங்களிலுமிருந்த சுவர்களில் ஆணிகளை அடித்து, அவைகளில் கெட்டியான கயிறுகளைப் போட்டு வலைபோலக் கட்டியிருந்தனர். நசுக்கப்