பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 செளந்தர கோகிலம்

பட்ட தாழைக் கட்டுகள் மேலே கிளம்பாமல் கயிற்றுச் சிக்கத்தின் அடியில் அழுத்தப்பட்டிருந்தன. ஆகவே, கிணற்றின் மேலே இருந்து பார்த்தால் தண்ணீர் நிறைந்திருப்பது போலக் காணப்பட்டது. தண்ணிருக்குள் முக்கால் முழ ஆழத்தில் கயிற்றுப் பின்னலும் அதன் கீழ் தாழைமடல் கட்டுகளும் இருந்தன.

ஆகவே, அந்தக் கிணற்றிற்குள் கோகிலாம்பாள் குதிக்கவே, அவளது கால்கள் தண்ணிருக்குள் போய்த் தாழைமடல் கட்டு களின் மேல் சுலபமாய் நின்றுவிட்டன. கட்டுகள் தரையிலிருந்து இடைவெளியின்றி மேல்வரையில் அடுக்கப்பட்டிருந்தது. ஆகையால், அவள் குதித்த அதிர்ச்சியினால்கூட கட்டுகள் நகராமல் இறுகலாய்க் கிடந்தன. விழுந்த உடனே தான் தண்ணீருக்குள் ஆழ்ந்து மூச்சுத் திணறல் கொண்டு மரண அவஸ்தையடைய நேருமென்று கோகிலாம்பாள் எதிர்பார்த்தாளேயன்றி, அவ்வாறு தண்ணிருக்குள் போய் எவ்வித அடியும், உபத்திரவமுமின்றி சுகமாக நின்றுவிடுவோமென்று அவள் சிறிதும் பார்க்கவில்லை. ஆதலால், அவள் பெரிதும் திகைப்படைந்து உடனே உண்மையை உணர்ந்து கொண்டாள். தோட்டக்காரர்கள் ஏதோ ஒரு கிணற்றில் தாழை மடல்களை ஊறப்போடுகிறார்கள் என்பதை அவள் அதற்குமுன் அறிந்திருந்தாள். ஆதலால், அவ்வாறு அது போடப் பட்டிருந்த கிணற்றில் தான் குதிக்க நேர்ந்ததே என்றும், தான் உயிரைவிடப் போக அதுவும் பலியாமல் ஏமாற்றமாயும் அடஜெயமாயும் முடிகிறதே என்றும் நினைத்து, அவ்வளவோடு மனத்தளர்வடையாமல், தான் அதைவிட்டு வெளிப்பட்டு வேறு கிணற்றுக்காவது போய் விழுந்து தனது தீர்மானத்தை நிறைவேற்றியே தீரவேண்டுமென்று எண்ணிக் கொண்டவளாய்த் தாழைமடல் கட்டுகளின்மேல் நடந்து சுவரோரமாகப் போய் அங்கே நீண்டு கொண்டிருந்த கருங்கல் படிகளில் காலை வைத்து சுலபமாக ஏறி மேலே சென்று, நாற்புறங்களிலும் திரும்பிப் பார்த்தாள். தென்னமரங்களுக்கு இப்பால் கமுகு மரங்கள் நிறைந்திருந்த பாகத்தில் பெரிய கிணறு ஒன்று காணப்பட்டதை அந்த மடந்தை கண்டு அந்த இடத்தைவிட்டுத் திரும்பி நடந்து மேற்படி கிணறு இருந்த இடத்தை நோக்கிச் சென்றாள், சென்று கிணற்றண்டை போய்ச் சேரவே, அதற்கு அப்புறத்தில் பெருத்த புதர்கள் போல சம்பங்கி, முல்லை, ஜாதிமல்லி முதலியவற்றின்