பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணப் பைத்தியம் i35

கோகிலாம்பாளைத் தமக்குக் கொடுப்பார்களா என்று அண்ணனும் தங்கையும் பிரயாசைப்பட்டுப் பார்த்தார்கள். அதுவும் பலிக்காமல் போயிற்று. கோகிலாம்பாளைக் கண்ணபிரான் பெரிய அபாயத் திலிருந்து காப்பாற்றியதுபோல தாம் ஒர் அபாயத்திலிருந்து அவளைக் காப்பாற்றிய காரணத்தை முன்னிட்டு அவர் அவளிடம் நேரிலேயே தமது விருப்பத்தை வெளியிட்டுப் பார்த்தார். அவளது மனஉறுதி எதற்கும் தளர்வதாக இல்லை. ஆகவே, கோகிலாம்பாளை அவர்களது சொந்த ஜனங்களுக்கு முன்னால் அவளது தங்கையைக் கொண்டே மானபங்கப்படுத்த வேண்டுமென்று நினைத்து, நிரம்பவும் தந்திரமாக அவளது தங்கையைத் தூண்டிவிட, அவள் அந்தக் காரியத்தைப் பூர்த்தியாகச் செய்து முடித்தாள். அதோடு சுந்தரமூர்த்தி முதலியாரது மனம் அமைதியடைய வில்லை. தங்கையை மறுபடி தூண்டிவிட்டு, அக்காளை வீட்டை விட்டுத் துரத்திவிடச் செய்து, அவளுக்கு எவ்விதமான பொருளும் கொடுக்காமல் ஏமாற்றச் செய்வதோடு, சில தினங்களுக்குள் தமது கலியாணத்தை முடித்துக்கொண்டு எல்லாச் சொத்துக்களையும் தமது சுவாதீனத்திற்குக்கொணர்ந்து விட வேண்டுமென்பது அவரது முக்கியமான நோக்கம். அவள் தம்மிடம் காதல் கொண்டு, தம்மோடு பேசவேண்டுமென்று தவித்திருக்கிறாள் என்பதை அவர் தமது தங்கையின் மூலமாய்த் தெரிந்துகொண்டிருந்தார். அந்த ஆசையைப் பூர்த்திசெய்வதுபோல நடித்து, தாம் அவளிடம் கிட்ட நெருங்காமல் தூரத்திலேயே இருந்தால், அவள் தனது மோக மயக்கத்தினாலும், அவரிடம் வைத்த பிரேமையினாலும், தாம் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வருவாள் என்ற தீர்மானத்துடன் அவர் அன்று அவளைத் தோட்டத்தில் சந்திப்பதாகக் கடிதம் எழுதியிருந்தார். செளந்தர வல்லியிடம் தாம் அப்போது அதிகமாய் நெருங்காது தூரத்திலேயே இருந்தால், அவளது ஆசையும் ஆவலும் அதிகரிக்குமென்ற நினைவைக் கொண்டவராய் அவரும் சிறிது தூரத்திலேயே நின்றவண்ணம் அவளைப் பார்த்துப் புன்னகை பூத்த இனிய முகத்தோற்றத்தோடு, ‘வா, செளந்தரா நான் உன்னுடைய விடுதிக்கே வரலாமாமென்று உத்தேசித்தேன். உன் சொந்த மனிதர் யாராவது கண்டு கொண்டால் உன் தமக்கைக்கு நேரிட்டதுபோல் உனக்கும் தலைகுனிவு ஏற்படப்போகிறதே