பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 செளந்தர கோகிலம்

என்ற அச்சத்தினால் இங்கே வரும்படி உனக்கு எழுதினேன். ஆனாலும், இரவில் இவ்வளவு அகால வேளையில் நீ இங்கே வரும்போது, ஏதாவது விஷ ஜெந்துக்களினால், உனக்குக் கெடுதல் வந்துவிடப் போகிறதேயென்று நினைத்து நான் துடிதுடித்து நின்றுகொண்டிருந்தேன். நல்ல வேளையாக யாதொரு கெடுதலுமில்லாமல் வந்து சேர்ந்தாய்’ என்று வாஞ்சையினால் முற்றிலும் இளகி உருகிப் போனவர்போல மொழிந்தார்.

அவரது இளகிய குரலொலியைக் கேட்கும் பொழுதே, அவளது தேகம் ஆனந்த பரவசமடைந்துவிட்டது. அவள் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த நாணமும், நடுக்கமும் அடைந்து வாய் திறந்து பேசவும் மாட்டாதவளாய் அஞ்சி ஒடுங்கி ஊமை போல நின்றுவிட்டாள்.

உடனே சுந்தரமூர்த்தி முதலியார் முன்னிலும் அதிக உருக்கமாகவும் இனிமையாகவும் பேசத்தொடங்கி, “என்ன செளந்தரா! பேசமாட்டேனென்கிறாய்? என்மேல் உனக்குக் கோபமா! நேரில் நானே வராமல், கடிதம் எழுதி உன் படுக்கையில் வைத்துவிட்டு வந்ததைப் பற்றிக் கோபமா? அதை யாராவது பார்த்துவிட்டார்களா?’ என்று கொஞ்சலாக மொழிந்தார்.

அதைக்கேட்ட செளந்தரவல்லி, “கடிதத்தை யாரும் பார்க்கவில்லை. என் பேரில் அவ்விடத்திற்குத் தான் கோபம் ஏற்பட்டிருக்குமோ என்பதைக் கேட்க வேண்டுமென்பதே நான் இவ்விடத்திற்கு வந்ததற்கு முதலாவது காரணம்” என்று நிரம்பவும் விநயமாகவும் பணிவாகவும் கூறினாள்.

சுந்தரமூர்த்தி முதலியார் : ஒ: அப்படியா? உன்மேல் நான் ஏன் கோபம் கொள்ளுகிறேன். நீ உன் விஷயத்திலாவது பிறரிடத்திலாவது தவறாக நடந்து கொண்டாயா! அப்படி ஒன்றுமில்லையே! மாசுமறுவற்ற பத்தரை மாற்றுத் தங்கமென்பது உனக்குத்தானே பொருந்தும். உன் அம்மாளும், அக்காளும் தவறு செய்துவிட்டால், அதற்கு நீ எப்படி உத்தரவாதி. அவர்களை அத்தனை ஜனங்களுக்கும் முன்னால், நீ அவமானப்படுத்தினாயே.