பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i46 - செளந்தர கோகிலம்

கொள்ளட்டும் என்று பலவாறு எண்ணமிட்ட வண்ணம் பங்களாவை நோக்கி நடந்து செல்லத் தொடங்கவே நடுவழியில், “யார் அது? செளந்தரா செளந்தரா’ என்று சிறிது தூரத்திற்கு அப்பால் வந்த ஒருவர் கேட்ட குரல் உண்டாயிற்று. கோகிலாம்பாள் திடுக்கிட்டு நடுங்கிப் போய் அப்படியே நின்று உற்றுப் பார்த்து, “யார் அது?’ என்று வினவினாள். உடனே “நான் தான் புஷ்பாவதி. உன்னுடைய அம்மாளை விட்டுவர இந்நேரம் பிடித்தது. படுக்கையிலிருந்த காகிதத்தைப் பார்த்தேன். நீ தான் வைத்துவிட்டு இங்கே வந்திருக்க வேண்டுமென்று யூகித்துக் கொண்டு, உடனே புறப்பட்டு வந்தேன். இருளில் வழி தெரிய வில்லை. தட்டித்தடுமாறிக் கொண்டு வந்து சேர்ந்தேன்’ என்றாள். உடனே கோகிலாம்பாளுக்கு உண்மை விளங்கியது. புஷ்பாவதி தன்னை ஆள் மாறாட்டமாய்த் தனது தங்கையென்று நினைத்து அவ்வாறு பேசுகிறாள் என்பதை நமது கோகிலாம்பாள் உடனே உணர்ந்து கொண்டாள். கொள்ளவே, அவளது நிலைமை நிரம்பவும் துன்பகரமாக முடிந்துவிட்டது. தான் இன்னாள் என்பதை வெளியிட்டால், அந்தக் காலத்தில் தான் பூஞ்சோலைக்கு வந்த காரணத்தை அவளிடம் வெளியிட வேண்டியிருக்கும். அதுவுமன்றி, அதுபோலவே புஷ்பாவதியின் நிலைமையும் துன்பகரமானதாகிவிடும். அந்த அகால வேளையில் அவள் அங்கே வந்ததற்கும், செளந்தரவல்லியை அவ்விடத்தில் எதிர் பார்த்ததற்கும், அவள் கடிதத்தைப் பார்த்துவிட்டு வந்ததாகச் சொன்னதற்கும் புஷ்பாவதி தனக்குச் சமாதானம் கூறவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும். புஷ்பாவதிக்கு அத்தகைய துன்பத்தை உண்டாக்க, கோகிலாம்பாள் விரும்பவில்லை; ஆகையால், தான் செளந்தரவல்லி போலவே நடித்துவிட்டுப் போய்விடவேண்டு மென்ற எண்ணம் கோகிலாம்பாளுக்கு உண்டாயிற்று. ஆனால், தானும் தனது அன்னையும் தனது சொந்தக்காரர்களின் பெயரைக் குறித்துச் சொல்லிவிட்டு, அதன் பயனாக அடைந்த அவமானம் அவளது மனத்தில் உறுத்திக்கொண்டிருந்த தாகையால், தான் மறுபடி பொய் சொல்வது கூடாதென்றும் அவள் நினைத்தாள். தான் அந்தச் சந்தர்ப்பத்தில் அதிகமாய் மலைத்து நிற்பதற்கு அவகாசமில்லையாதலால், எப்படியாவது ஒரு முடிவைச் செய்ய வேண்டியிருந்ததுபற்றி இரண்டு