பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 செளந்தர கோகிலம்

புஷ்பாவதி : அப்படியானால் கோகிலாம்பாள் சங்கதியை யெல்லாம் அம்மாளிடம் சொல்லிக் கோள் நெருப்பு மூட்டி இருப்பாள். என் பேரில்கூட அம்மாள் இனி சம்சயம் கொள்வது நிச்சயம்.

செளந்தரவல்லி : அம்மாள்தான் உன்னை என்ன செய்ய முடியும்; கோகிலாதான் என்ன செய்ய முடியும். ஒன்றும் செய்ய முடியாது. இவர்களுடைய அண்டை அயலில் நீ குடியிருக்கிறாயா அல்லது சாப்பாட்டுக்குத்தான் நீ இவர்களுடைய கையை எதிர் பார்த்து நிற்கிறாயா? - என்றாள். -

உடனே புஷ்பாவதி சிறிதுநேரம் ஆழ்ந்து யோசனைசெய்து, “சரி; இருக்கட்டும். நான் ஒன்றையும் அறியாதவள் போலவும் சாதாரணமாய்ப் போகிறவள் போலவும் அம்மாளிடம் போய், நான் எங்கள் வீட்டுக்குப்போக அநுமதி கேட்டுப் பார்க்கிறேன். தாயும் பெண்ணும் என்ன நிதானத்தில் இருக்கிறார்களென்பது உடனே தெரிந்துபோகும். அதைத் தெரிந்துகொண்டு வந்து சேருகிறேன்” என்று கூற, செளந்தரவல்லி அதை ஆமோதித்தாள். உடனே புஷ்பாவதி அவ்விடத்தைவிட்டுப் பூஞ்சோலையம்மாள் இருந்த இடத்தை நோக்கிச் செல்ல, செளந்தரவல்லி மறுபடி தனது சயன அறையை அடைந்தாள். அடைந்தவள் தனது தாயும், அக்காளும் விஷயங்களைத் தெரிந்துகொண்டு, என்னென்ன ஏற்பாடுகளுடன் இருக்கிறார்களோ என்பதைப் பற்றியும், தான் தனது அக்காளை எப்படி வீட்டைவிட்டு வெளியேற்றுவதென் பதைப் பற்றியும் சிந்தனை செய்து, மிகுந்த கவலையும் கலவரமும் அடைந்தவளாய்ப் புஷ்பாவதியின் வருகையை ஆவலோடு எதிர் பார்த்திருந்தாள். அவளிடம் தனது தாய் எவ்விதமான செய்தி சொல்லியனுப்புகிறாளோ என்று கவலையுற்றவளாய் அடிக்கடி கடிகாரத்தைப் பார்ப்பதும் யோசனை செய்வதுமாய் இருந்தாள். தனது கலியான ஏற்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு சுந்தரமூர்த்தி முதலியார் அன்று காலையில் மறுபடி வருவதாகக் கூறிச் சென்றார். ஆதலால், அவரது வருகையையும் அவள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துத் தவித்துக் கொண்டிருந் தாள். சிறிது நேரத்தில் புஷ்பாவதி மிகுந்த சந்தோஷமும் குது.ாகலமும் அடைந்தவளாய்ப் புன்னகை தவழ்ந்த முகத்தோடு விரைவாக அங்கு ஓடிவந்தாள். வந்தவள். “செளந்தரா செளந்தரா!