பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 செளந்தர கோகிலம்

புஷ்பாவதி : நேற்று இவர்கள் இருந்த இருப்பில் சமாசாரப் பத்திரிகை தான் குறைவு நேற்று மாலையில் நானும் செளந்தர வல்லியும் தனியாயிருந்த சமயத்தில், அது வந்தது. செளந்தர வல்லி அதை வாங்கி எங்கேயோ ஒரு மூலையில் எறிந்தாள்.

சுந்தரமூர்த்தி முதலியார் : சரி, அதை யாராவது பிரித்துப் பார்ப்பதற்குள் நீ அதை எடுத்துக் கிழித்து நெருப்பில் போட்டு விடு. அதில் ஒரு முக்கியமான சங்கதி வெளியாயிருக்கிறது.

புஷ்பாவதி : (மிகுந்த ஆவலுடன்) அப்படிப்பட்ட விபரீத சங்கதி என்ன?

சுந்தரமூர்த்தி முதலியார் : நான் அதை வாயால் சொன்னால், அது எவருடைய காதிலாவது விழும். இதோ அந்தப் பத்திரிகையே ஒன்று இருக்கிறது. நீயே அதை உன் மனசிற்குள்ளாகவே படித்துப் பார்த்துத் தெரிந்துகொள் - என்று கூறித் தமது சட்டைப் பையில் திணிக்கப்பட்டிருந்த சுதேச மித்திரன் பத்திரிகையை எடுத்து அதைப் பிரித்து, அவள் படிக்க வேண்டிய இடத்தைச் சுட்டிக் காட்டினார்.

புஷ்பாவதி அதைத் தனக்குள்ளாகவே படிக்கலானாள். அது அடியில் வருமாறு இருந்தது:

மஞ்சட் குப்பம் கூடலூரில் இறந்தவர் பிழைத்தார் (நமது நிருபர் தந்தி மூலம் தெரிவிக்கிறார்)

இவ்வூர் டிப்டி கெலக்டருடைய கச்சேரியில் இன்று ஒரு ருசிகரமான வழக்கு விசாரணைக்கு வந்தது. அது சாதாரணமாய் இவ்வூர் சப் மாஜிஸ்டிரேட்டின் முன்பு வரவேண்டியது. திடீரென்று ஹிருதய ஒட்டம் நின்று போன காரணத்தினால், அவர் ஒரே நிமிஷத்தில் உயிர் துறந்தார். ஆகவே, இன்று அவரிடம் வரவேண்டிய அவசரமான வழக்குகளெல்லாம் டிப்டி கலெக்டரிடம் வந்தன. விடியற்காலம் சென்னையிலிருந்து புறப்பட்டு இவ்வூருக்குக் காலை சுமார் பத்து மணிக்கு வரும் ரயில் இவ்வூரில் குறுக்கிடும் கெடிலம் என்ற ஆற்றின்மேல் வந்து கொண்டிருக்கையில், ஸ்திரீகளின் வண்டியில் தனியாக உட்கார்ந்திருந்த ஒரு ஸ்திரீ கதவைத் திறந்து கொண்டு ஆற்று வெள்ளத்தில் குப்புற விழுந்து தண்ணிருக்குள் முழுகிப் போய்