பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17Ο செளந்தர கோகிலம்

முயன்றதாக ஒப்புக் கொள்ளுகிறீர்கள். ஒரு மனிதர் மற்ற வருடைய உயிரை விலக்குவது எப்படிக் குற்றமாகிறதோ, அதுபோல, தம் உயிரை விலக்கிக் கொள்வதும் சட்டப்படி குற்றமாகிறது. அதற்குள்ள தண்டனையை நான் உங்களுக்கு விதிப்பதைத் தவிர, வேறு மார்க்கமில்லை. ஆனால் உங்களைச் சிறைச்சாலைக்கு அனுப்ப என் மனம் இசையவில்லை. ஆகையால், உங்களுக்கு ஏதாவது சொற்ப் அபதாரம் விதிக்கலா மென்று நினைக்கிறேன். ,

அந்த ஸ்திரீ : நான் ஊரைவிட்டுப் புறப்பட்டபோது டிக்கெட்டுக்குக் கொடுத்தபோது பாக்கி இரண்டு ரூபாய் இருந்தது. நான் ஆற்றில் விழப்போவதை உத்தேசித்து, வழியில் இருந்த ஒரு பிச்சைக்காரரிடம் அதைக் கொடுத்துவிட்டேன். என்னிடம் இப்போது இருப்பது என் இடுப்புத் துணிதான்.

டிப்டி கலெக்டர் : (மிகுந்த இரக்கமும் அதுதாபமும் கொண்டு) உங்கள் தோற்றமும், குரலும், வார்த்தைகளும் நீங்கள் ஏற்கெனவே பெருத்த விசனத்தில் மூழ்கி இருப்பவர்கள் என்பதைக் காட்டுகின்றன. ஆகையால், உங்களுக்குச் சிறைச்சாலை தண்டனை கொடுத்து இன்னமும் உங்களை அதிக விசனத்தில் ஆழ்த்த எனக்கு இஷ்டமில்லை. ஏதாவது சொற்ப அபராதம் போட்டால், அதைக் கட்டிவிடுவீர்கள் என்று பார்த்தேன். அதுவுமில்லை அபராதம் கொடுக்காவிடில் அதற்குப் பதிலாக இவ்வளவு காலம் சிறையிலிருக்க வேண்டுமென்று நான் சட்டப்படி உத்தரவு செய்ய வேண்டும். ஆகையால், நான் சர்க்கார் சட்டப்படி உங்களுக்குப் பத்து ரூபாய் அபராதம் அல்லது கச்சேரி கலைகிறவரையில் காவல் தண்டனை விதித்திருக்கிறேன். பரோபகாரம் என்கிற தெய்வச் சட்டத்தின்படி நானே என் சொந்தப் பணத்திலிருந்து உங்களுக்காகப் பத்து ரூபாய் கட்டி விடுகிறேன். ஆனால் உங்களைத் தனிமையில் வெளியில் அனுப்ப எனக்கு இஷடமில்லை. என் வீட்டில் தாயார், தகப்பனார். சம்சாரம், குழந்தைகள், தங்கை தமக்கைமார் முதலிய ஜனங்கள் இருக்கிறார்கள். நாங்களும் உங்கள் ஜாதியைச் சேர்ந்தவர்களே! உங்களை வண்டியில் வைத்து எங்கள் வீட்டுக்கு அழைத்துப் போகும்படி சேவகனை அனுப்புகிறேன். என் வீட்டு ஜனங்கள் உங்களையும் எங்கள் சொந்த மனிதராகப் பாவித்து