பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 செளந்தர கோகிலம்

அன்றைய பகல் போஜனத்தை அவன் மூலமாகக் கொடுத்தனுப்பி விட்டு, அன்றைய பகல் முழுதும் வக்கீலின் வருகையை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த வண்ணம் வேதனைக் கடலில் ஆழ்ந்திருந்தாள்.

வக்கீல் வாடிய முகத்துடன் மாலையில் அங்கு வந்து சேர்ந்து “அம்மா! நான் என்னால், ஆனவரையில் எவ்வளவோ திறமை யாகப் பேசிப் பார்த்தேன். பிரயோசனம் இல்லாமல் போய் விட்டது. அவரை ஜாமீனின் மேல் விடக்கூடாதென்று போலீசார் பலமாக ஆட்சேபித்து எழுதிவிட்டார்கள். இந்த நீதிபதி சுத்த பயங்கொள்ளி, போலீசாரென்றால், அவருக்குத் துடை நடுக்கம். போலீசார் தாம் இன்னம் 10 தினங்களுக்குள் தங்களுடைய விசாரணையை முடித்து, கிடைக்கக்கூடிய சாட்சியங்களை யெல்லாம் சேகரம் செய்துகொண்டு விவரமான குற்ற அறிக்கை அனுப்புவதாகவும், அதுவரையில், அவர் சப் ஜெயிலிலேயே இருக்க அநுமதி கொடுக்க வேண்டுமாகவும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய வீட்டிலிருந்து போலீஸ் கமிஷனராலேயே திருட்டு சொத்துகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால், நாம் அவரை ஜாமீனில் விடும் விஷயமாய் ஹைகோர்ட்டில் மனுச் செய்துகொண்டால் கூட, அநுகூலமாகு மென்று நான் நினைக்கவில்லை. ஆகையால், நாம் இந்த 10 தினங்களும் பல்லைக் கடித்துக்கொண்டு இருப்போம். விசாரணை சமயத்தில் நான் என்னால் எவ்வளவு சாமர்த்தியமாக வேலை செய்ய முடியுமோ அவ்வாறு செய்து அவரைத் தப்ப வைக்கப் பிரயத்தனப்படுகிறேன். அது வரையில் நீங்கள் தவறாமல் அவருக்கு ஆகாரம் அனுப்பி, தைரிய வார்த்தை சொல்லிக்கொண் டிருங்கள். என் மேல் விலாசத்தை நான் எழுதிக் கொடுத்துவிட்டுப் போகிறேன். என்னால் ஏதாவது காரியம் ஆகவேண்டுமானால், அவ்விடத்திற்கு ஆளை அனுப்புங்கள்’ என்று கூறி விலாசத்தை எழுதிக் கொடுத்தபின், அவ்விடத்தை விட்டுத் தமது வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார். தனது மணாளன் ஜாமீனின் மேல் வரவில்லையே என்றும், பத்து நாள்களுக்குப் பிறகாவது அவன் விடுதலையடைவானோ மாட்டானோவென்றும் நினைத்து நினைத்து அளவற்ற சஞ்சலமும் வேதனையும் கொண்டு துக்க சாகரத்தில் மூழ்கியபடி இருந்து வந்தாள். கற்பகவல்லியம்மாளை