பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணக் கோலம் - கிரகப்பிரவேசம் 193

எப்படியாவது தான் கண்டுபிடித்து அழைத்து வரவேண்டுமென்ற ஆவலினால் அவளது மனம் துடித்தது. ஆனாலும், ஏராளமான வேலைக்காரர்கள் சென்று நாலா பக்கங்களிலும் தேடிப் பயனின்றித் திரும்பி வந்துவிட்டனர். ஆதலால், தான் மறுபடி எவ்விதமான முயற்சி செய்வதென்பதை அறியாதவளாய்த் தத்தளித்திருந்தாள். கண்ணபிரான் சிறைச்சாலையில் இருக்கிற வரையில், தனது தாய் கடிதம் எழுதிவிட்டுப் போனது முதலிய எந்த வரலாறையும், தான் அவனுக்குத் தெரிவிக்காமவிருப்பதே உசிதமானதென்று நினைத்து, அதுபோல நடந்து கொண்டாள். ஆயினும், கோகிலாம்பாளுக்குப் போலீஸ் இன்ஸ்பெக்டரால் ஏதேனும் அபாயம் நேரிட்டிருக்குமோவென்று கண்ணபிரான் எண்ணி வதைபட்டிருந்தான். ஆதலால், தான் rேமமாய் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டதாக மாத்திரம் அவனுக்குச் செய்தி சொல்லி அனுப்பி வைத்தாள். அவர்கள் இருவரும் அந்த விசாரணைத் தேதியை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்தபடி நெருப்புத் தணலின் மேல் இருப்பவர்போல் தவித்துக் கொண் டிருந்தனர்.

பூஞ்சோலையம்மாளோ ரகஸியத்தில் வண்ணாரப்பேட் டைக்கு அடிக்கடி ஆளை அனுப்பி அவ்விடத்து நிலைமையைத் தெரிந்து கொண்டு உள்ளுற மனமாழ்கி இருந்தாள். ஆனாலும், செளந்தரவல்லியின் கலியாணத்திற்கு ஆகவேண்டிய முஸ்தீபு களைச் செய்வதில் தனது கவனத்தைச் செலுத்தி வந்தாள். புஷ்பாவதி புரசைப்பாக்கத்திலேயே இருந்து, செளந்தரவல்லியோடு கூடிக்கூடி ஆலோசனை செய்து, சுமார் ஐம்பதினாயிரம் ரூபாய் வரையில் அவளிடமிருந்து பறித்து, அதை சுந்தரமூர்த்தி முதலியாரிடம் கொடுக்க, அவர் அடிக்கடி அங்கே வருவதும், அப்போதே அந்தக் குடும்பத்தாருக்கு மாப்பிள்ளை ஆய்விட்ட வர் போலவும் நடந்து சகலமான உரிமைகளையும் அதிகாரங்களை யும் வகித்துக் கலியாணத்துக்குத் தேவையான ஆடையாபரணங்கள் முதலியவைகளைச் சேகரம் செய்வதும், மைலாப்பூர் பங்களா விற்குப் போய் அவ்விடத்தில் ஆகவேண்டிய காரியங்களை முடிப்பதும், பூஞ்சோலையம்மாளின் பந்து ஜனங்களது வீடுகளுக்குப் போய், அவர்களுக்குத் தக்க சமாதானம் கூறிக் கலியாணத்திற்கு அழைப்பதுமாய்ப் பொழுதைப் போக்கினார்.

Gl.35m.iv.–13