பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 செளந்தர கோகிலம்

உடனே போலீஸ் கமிஷனர் அவரை அமைதியாக நோக்கி நயமாகப் புன்னகை செய்தபடி, தாலி கட்ட வேண்டாம். நிறுத்துங்கள், நிறுத்துங்கள். நான் பக்கத்தில் வந்து விஷயத்தைத் தெரிவிக்கிறேன்” என்றார்.

அவ்வாறு அவர் அபசகுனமான சொற்களைக் கூறியதைக் கேட்டு அங்கிருந்தோர் அனைவரும் சகிக்க வொண்ணாத பெரும் கோபமும் பதைபதைப்பும் கொண்டு போலீஸ் கமிஷனரை அடித்து வெளியில் துரத்துவதற்கு ஆயத்தமாயினர். அவர் மணமகனிடம் நெருங்குவதற்கு வழிவிட ஜனங்கள் மறுத்து விட்டனர். போலீஸ் கமிஷனர் ஜனக் கும்பலின் நடுவில் அகப் பட்டுக் கொண்டார். சிறிதும் எதிர்பாராதபடி போலீஸ் கமிஷனர் அவ்வாறு வந்து தாலி கட்டுவதை நிறுத்தும்படி தடுத்ததைக் கேட்கவே, சுந்தரமூர்த்தி முதலியாரது முகம் மாறிப் போய் விட்டது. அவரது அடிவயிற்றில் தீ வீழ்ந்தது போலாய்விட்டது. ஆயினும், அவர் தமது இயற்கையான மனதிடத்தையும், கம்பீரப் பார்வையையும் கைவிடாமல் நிமிர்ந்து கமிஷனரைப் பார்த்து, “என்ன ஐயா இது! இது உம்முடைய கச்சேரி என்று நினைத்துக் கொண்டீரா மகா பெருமை வாய்ந்த கனதனவான்களின் முன்னால் வருகிற நீர் இவ்வளவு காலையிலேயே நிதானம் தவறிப் போகும்படியான காரியத்தைச் செய்துவிட்டு வந்திருக்கிறீரே! போய் உட்கார்ந்து கொள்ளும். லக்னம் தவறிப் போகும். திருமாங்கலிய தாரணம் ஆனபிறகு நீர் அசிஸ்டெண்டு கலெக்டரிடம் ஏதாவது சொல்ல வேண்டுமானால், சொல்லலாம். கச்சேரி விஷயங்களையெல்லாம் பேச இது தானா சமயம்? பெரிய உத்தியோகஸ்தராயிருந்து, உமக்கு இது தெரியவில்லையே” என்று கூறி ஜனங்களை நோக்கி, ‘இவரை வெளியில் கொண்டுபோய் உட்கார வையுங்கள்’ என்றார்.

அதைக் கேட்ட ஜனங்கள் அவரை நோக்கி, ‘ஐயா போய் ஒரு பக்கமாக உட்கார்ந்து கொள்ளுங்கள்’ என்று கூறி அவரை அப்பால் அனுப்ப முயன்றனர்.

அவ்வாறு அவ்விடத்தில் ஏதோ கலகம் நடக்கிறதென்று கண்ட வாத்தியக்காரர்கள் வாத்தியங்களை நிறுத்திவிட்டனர். ஸ்திரீகள் தமது பாட்டை நிறுத்திவிட்டனர். வேத முழக்கமும் நின்றுவிட்டது. எல்லோரும், “என்ன அது என்ன அது!” என்று