பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 செளந்தர கோகிலம்

மனவெழுச்சியடைந்து பேராநந்த வெள்ளத்தில் தோய்ந்து போயிற்று. அவரது தேகம் தன்னை மறந்து பூரித்துப் பரவச மடைந்தது. அந்த ஒரு நிமிஷத்தில் அவர் கொண்ட ஆநந்தப் பெருக்கினால், அவரது வயது முதிர்ச்சியில் இருபது வயது குறைந்து போனதுபோல் அவர் உணர்ந்தார். புஷ்பாவதியை இனி நாம் கமலவல்லியென்று குறிப்போம். அந்த மடந்தையை முன்னால் அனுப்பிவிட்டுப் பின்னால் சாமியார்கள் இருவரும் சந்தோஷப் பெருக்கினால் மலர்ந்த இனிய முகத்தினராய் வந்து சேர்ந்தனர். திவான் சாமியார் தமது தந்தையை பயபக்தி வாஞ்சையோடு நோக்கி, ‘அப்பா என்னுடைய தாயாரை அழைத்துக் கொண்டு வந்து தங்களிடம் ஒப்புவித்துவிட்டேன். தாங்கள் மயானத்திலிருந்து காத்தானை அனுப்பிய சங்கதியே அம்மாளுக்குத் தெரியாதாம். அப்போது அம்மாள் விசனப் பெருக்கில் எதையும் கவனிக்கவில்லையாம். ஒருவேளை தன் தாய் அவனுக்குப் பதில் சொல்லியிருக்கலாம் என்றும், இரவில் காத்தான் ஆள் மாறாட்டமாய்த் தப்பான தகவல் கொடுத் திருப்பான் என்றும் சொல்லுகிறார்கள். தாங்கள் உயிரோடு இருக்கிறீர்களென்று இதுவரையில் தெரியாதாம். இப்போது நாங்கள் சொன்னவுடனே, அவர்கள் பிரமாதமான ஆச்சரியமும், ஆநந்தமும் அடைந்து, உடனே புறப்பட்டு வந்துவிட்டார்கள். தாங்கள் அவர்கள்மேல் கொஞ்சமும் வெறுப்பென்பதே கொள்ளாமல், பழைய நினைவுகளை யெல்லாம் சுத்தமாய் மறந்து, அவர்களைக் கலியாணம் செய்து கொண்ட காலத்தில், எவ்வளவு அன்பும் ஆசையுமாய் இருந்தீர்களோ, அதுபோலவே, இப்போதும் தாங்கள் அவர்களை நடத்த வேண்டும். அம்மாள் இந்த நிமிஷம் வரையில் மகா புனிதவதியாகவே இருந்து வந்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் பலவகைகளில் திருப்தி செய்து கொண்டோம். தாம் பாலியத்தில் விதவையாய் விட்டோம் என்று நினைத்து ஏங்கி விசனத்தில் ஆழ்ந்திருந்தவர்கள் ஆகையால், இப்போது தங்களை தத்ரூபம் தெய்வம் போலவே கொண்டாடுவார்கள் என்பதைத் தாங்கள் இனி அநுபவத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

அதைக் கேட்ட குஞ்சிதபாத முதலியாரது உள்ளம் குளிர்ந்தது. தாங்க வொண்ணாத அபாரமான சந்தோஷ்மும்