பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 செளந்தர கோகிலம்

குஞ்சிதபாத முதலியாரும் தமது யெளவன மனை யாட்டியுடன் சம்பாவிக்க ஆவல் கொண்டிருந்தார். ஆதலால், அதற்கிணங்கி, கமலவல்லியிருந்த அறைக்குள் சென்றுவிட்டார். உடனே உதவிச் சாமியார் எதையோ நினைத்துக் கொண்டவர் போலத் தோன்றி, ‘சுவாமிகளே! ஒருவேளை புதுச்சேரி சப் இன்ஸ்பெக்டரும், திருவடமருதூர் சப் இன்ஸ்பெக்டரும் நாம் காரியம் ஆனவுடன் அவர்களைக் கவனிக்காமல் வந்துவிட்டோ மென்று நினைத்துக் கொண்டு ஊருக்குப் போனாலும் போய் விடுவார்கள். நான் உடனே ஒடி அவர்களைப் பார்த்து உபசார வார்த்தைகள் கூறி அழைத்துக் கொண்டு வருகிறேன். இதோ பக்கத்திலுள்ள சாப்பாட்டுக் கடையில்தான் நம்முடைய போஜனத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். எல்லாவற்றையும் இங்கே கொண்டு வந்து வைக்கும்படிச் சொல்லிவிட்டு அங்கே போகிறேன்” என்றார்.

திவான், “சரி, அப்படியே செய்யுங்கள்’ என்றார்.

உடனே உதவிச் சாமியார் புறப்பட்டுப் போய் போஜ னத்தை அனுப்பியபின் தமது போஜனத்தை அவ்விடத்திலேயே முடித்துக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டுத் தாம் செல்ல நினைத்த இடங்களுக்கெல்லாம் சென்றுவிட்டு பிற்பகல் மூன்று மணி சமயத்திற்குத் திரும்பி வந்து சேர்ந்தார். அதற்குள், திவான் சாமியாரும், மற்ற இருவரும் தங்களது போஜனத்தை முடித்துக் கொண்டு ஒரு துாக்கம் துரங்கி எழுந்தனர். திவான் சாமியார் உதவிச் சாமியார் அவ்வளவு நேரமாய் வராததைப் பற்றி கவலை கொண்டு, அவரைப் பார்த்துவிட்டு வருவதாய்க் கிழவரிடம் கூறி விட்டு வெளியில் போயிருந்தார். அப்பொழுது உதவிச் சாமியார் வேறு வழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தார். கிழவர் தமது யெளவன மனைவியின் மாறாத பிரியத்தைக் கண்டு பூரித்து மெய்ம்மறந்து குழந்தை போலக் குது.ாகலமாகச் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார். உதவிச் சாமியார் திரும்பி வந்தவுடன், திவான் சாமியார் தம்மைத் தேடிக்கொண்டு போயிருப்பதாக உணர்ந்து, “நான் போனால் வராமல் இருப்பேனா ஏன் அவர்கள் எனக்காக வீண் பாடு படவேண்டும். ஐயோ பாவம் நான் கொஞ்சம் தாமசமாய் வந்ததால்,