பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்த கலசம் 239

அவர்களுக்கு இந்த உபத்திரவம் ஏற்பட்டது. ஆனாலும் அவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் வெளியில் போனதும் தெய்வ சங்கற் பந்தானென்று நினைக்கிறேன்” என்றார்.

கிழவர் : ஏன் சுவாமிகளே அப்படிச் சொல்லுகிறீர்கள்? அவன் வெளியில் போனதில் ஏதாவது நன்மையுண்டா?

உதவிச் சாமியார் : ஆம். நாம் இருவரும் தனியாக வார்த்தை சொல்லும்படியான சந்தர்ப்பம் வாய்த்ததல்லவா. அதைத்தான் நான் நன்மையாகக் கருதுகிறேன்.

கிழவர் : அவனுக்குத் தெரியாமல் தாங்கள் என்னிடம் ஏதாவது சங்கதியைப் பற்றிப் பேச எண்ணுகிறீர்களா?

உதவிச் சாமியார் : ஆம்.

கிழவர் : என்ன அது? சொல்லுங்களேன்.

உதவிச் சாமியார் : நான் திருவையாற்றில் வந்து தங்களைப் பார்த்த காலத்தில், இவர்கள் தங்கள் குமாரருடைய சிநேகித ரென்று சொன்னிர்களல்லவா. அதை வைத்துக் கொண்டு நான் இவர்களைச் சாதாரண மனிதரென்று நினைத்தேன். அதன் பிறகு நான் இவர்களோடு பழகிப் பழகி இவர்களுடைய உண்மையான மகிமையைக் கண்டுகொண்டேன். நம்முடைய பழைய காலத்து மகரிஷிகளிடத்தில்கூட இவர்களிடத்தில் இருக்கும் அபார சக்தி இருந்திருக்குமென்று நினைக்கவில்லை. இப்பேர்ப்பட்ட பேசுந் தெய்வத்தைத் தாங்கள் மோகலிங்மென்றும், அடே என்றும் கூப்பிடுவதைக் காண என் உயிரே போய்விடும்போல இருக்கிறது. தாங்கள் அப்படிச் செய்வது பெருத்த அபசாரமும் பாவச் செய்கை யுமாகும். இதுவரையில் போனது போகட்டும். இனி தாங்கள் அப்பேர்ப்பட்ட ஒருமைப் பதத்தை உபயோகிக்க வேண்டாம்.

கிழவர் : (திடுக்கிட்டு நடுங்கிப்போய்) ஆ! அப்படியா! ஐயோ! நான் தெரியாமல் பெரும் பிழை செய்துவிட்டேனே! அடாடா முதலில் நான் அவர்களை மரியாதைப் பதங்களால் தான் அழைத்தேன். அவர்கள் ஒருமைப் பதத்தால் அழைக்கும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அதனாலல்லவா, இதுவரையில் அப்படிச் செய்துவிட்டேன்! இனி அம்மாதிரி நான் செய்யவே மாட்டேன்.