பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்த கலசம் 247

என் கண் கூசுகிறதே! என் உயிர் துடிக்கிறதே! எழுந்திரம்மா!” என்று கூறிய வண்ணம் அவளண்டை ஓடி வந்தாள்.

சிறிதும் எதிர்பார்க்காத விதமாய் செளந்தரவல்லி திடீரென்று உள்ளே வந்து அவ்வாறு பிரியமாகிய அமிர்தத்தை மழைபோலச் சொரிந்ததைக் கண்ட கோகிலாம்பாள் திடுக்கிட்டு சரேலென்று எழுந்து உட்கார்ந்து தனது கேசத்தையும் ஆடையையும் திருத்திக் கொண்டு, தனது கண்களையும் செவிகளையும் நம்பாமல் இரண்டொரு நிமிஷ நேரம் பிரமித்துக் கல்போல இருந்து விட்டாள். மகா வசீகரமான கலியாணக் கோலத்தோடு ரதிதேவி போல திடீரென்று அவள் தனக்கெதிரில் வந்து நின்றது. அவளுக்கு சொப்பனக் காட்சிபோலத் தோன்றியதேயன்றி உண்மைக் காட்சியாகத் தோன்றவே இல்லை. எவளது வருகையை அவள் சிறிதும் எதிர்பார்க்க வில்லையோ, அவளே தனது கலியான வைபவத்தைவிட்டுத் தனிமையில் அவ்வளவு தூரம் வந்தாள் என்றால், அது கோகிலாம்பாளுக்கு மானnகத் தோற்றமாகப் பட்டு மிகுந்த மலைப்பையும் மனப்பிராந்தியையும் உண்டாக் கியது. ஆகவே, அவள் அப்படியே விழித்தபடி மெளனமாயிருக்க, அதைக் கண்ட செளந்தரவல்லி தனது அக்காளுக்குப் பக்கமாய்ப் போய் உட்கார்ந்து மிகுந்த வாத்சல்யத்தோடும் பாசத்தோடும் அவளைக் கட்டித் தழுவி அவளது முகத்தைத் தனது மார்பின்மீது சார்த்தி, அவளது கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணிர் வெள்ளத்தைத் துடைத்துவிட்டு, “அக்கா! நான் தெரியாத்தனத் தினாலும், ஆத்திர புத்தியினாலும், உன் மனம் புண்படும்படியான காரியங்களைச் செய்து, பெருத்த அபராதியாகிவிட்டேன். அதற்குத் தண்டனை கைமேல் கிடைத்துவிட்டது. உன் வதைதான் என்னை இப்படித் தாக்கியதென்பது நிச்சயம். அக்கா! உன் விஷயத்தில் நான் செய்த தீங்குகளையெல்லாம் நீ இந்த rணம் முதல் மறந்துவிட வேண்டும். நான் உன் விஷயத்தில் மரியாதைத் தவறான சொற்களை உபயோகித்ததையும் மறந்து என்னை rமிக்க வேண்டும். நான் லக்ஷம் தரம் உன் காலைத் தொட்டுக் கும்பிடுகிறேன். நீ ஆழ்ந்த உறுதியான விவேகம் படைத்தவள். உன் நடத்தையில் தவறு ஏற்படுவது அரிது. எனக்கு விவேகம் இருந்தாலும், என் ஆத்திர புத்தியில், எதைப் பற்றியும் நான் உடனே தவறான அபிப்ராயம் கொண்டு விடுகிறேன். மனிதர்