பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்த கலசம் 249

அப்படியா இதெல்லாம் நிஜந்தானா என்ன ஆச்சரியம் என்ன ஆச்சரியம் இப்படியும் உலகத்தில் நடக்குமா எனக்கு இன்னமும் நம்பிக்கைப்பட மாட்டேனென்கிறதே! அம்மா செளந்தரா! நான் இப்போது என்னுடைய அதிர்ஷ்டத்தைப் பற்றிக்கூட அதிகமாய் சந்தோஷப்படவில்லை. அந்தச் சண்டாளனுக்கும் உனக்கும் ஏற்பட இருந்த முடிச்சைக் கடவுள் நீக்கினாரே! அதை நினைக்கத்தான் எனக்கு மயிர்ச்சிலிப்பு உண்டாகிறது என்மனசு பூரித்துப் பொங்கிப் பரவசமடைகிறது. கடவுள் கருணாநிதி யல்லவா! அவரே தான் வந்து இந்தப் பேரிடரை விலக்கி காப்பாற்றி இருக்கிறார். கடவுளின் துணையில்லாவிட்டால், கண்ணுள்ள குருடரான நாம் இந்த உலகத்தில் ஒரு rணநேரம் கூட இருந்து வாழ முடியாது,’ என்று கூறி முன்னிலும் அதிகரித்த வாஞ்சையும் பாசமும் தோற்றுவித்து செளந்தரவல்லியைத் தழுவினாள். அக்காளும் தங்கையும் பகைத்துப் பிரிந்து, அவ்வாறு மறுபடியும் கூடி ஒன்றுபட்ட காட்சி தெய்வமும் கண்டு கண் கலங்கத் தக்க மகா உருக்கமான காட்சியாக இருந்தது.

 *

இனி நாம் சிறிது காலம் சென்னையை விட்டு மஞ்சட்குப்பம் கூடலூருக்குச் செல்வோம்; அவ்விடத்திலுள்ள டிப்டி கலெக்ட ருடைய வீட்டில் இருந்த கற்பகவல்லியம்மாளது நிலைமை கல்லும் கரைந்துருகத் தக்கதாக அவ்வளவு பரிதாபகரமாக இருந்து வந்தது. டிப்டி கலெக்டரும், அவரது தாய் தந்தையர் மனைவி, மக்கள், சகோதரிகள் முதலிய எல்லோரும் அந்த அம்மாளை குணவதியம்மாள், குணவதியம்மாள் என்று நிரம்பவும் பட்சமாகவும் வாஞ்சையாகவும் கூப்பிட்டு, புதிதாய் வரும் சம்பந்திக்கு மரியாதைகள் செய்வதைவிட அதிகமாக அந்த அம்மாளுக்கு உபசரணை புரிந்து அவளைத் தரையில் விடாமல் தங்களது ஹிருதய கமலத்திலேயே வைத்திருந்தனர் என்று கூறுவது மிகையாகாது. கற்பகவல்லியம்மாளது மகா மிருதுவான தோற்றமும், அமிர்தம் போன்ற குணமும், மாதுரியமான சொற்களும், அந்த அம்மாள் தக்க பெரிய இடத்தைச் சேர்ந்த வளாகத்தான் இருக்க வேண்டுமென்ற பெருத்த சந்தேகத்தை அவர்கள் எல்லோரது மனத்திலும் உண்டாக்கிவிட்டன. ஆதலால், கற்பகவல்லியம்மாளது பெயர் ஊர் முதலிய வரலாறுகளை அறிய