பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25O செளந்தர கோகிலம்

வேண்டுமென்று அவர்கள் பட்ட பாடு கணக்கிலடங்காதது. கற்பகவல்லியம்மாள் தேனொழுகுவது போலப் பேசி அவர்களெல் லோரையும் சமாதானப்படுத்தி, ‘அம்மா! என்னுடைய பெயரையும் ஊரையும் மற்ற வரலாறுகளையும் நான் இப்பேர்ப் பட்ட மகா உபகாரிகளான உங்களிடம் வேண்டுமென்று மறைத்து வைக்கவில்லை. அவைகளை நீங்கள் தெரிந்து கொண்டால், நீங்கள் எவ்வளவோ சந்தோஷமாக இருப்பு தெல்லாம் ஒரு நொடியில் துக்கமாக மாறிவிடும். என் விஷ்யத்தில் இவ்வளவு தூரம் இரக்கங்கொண்டு உதவி புரியும் புண்ணியாத் துமாக்களுக்கு நான் தீமையையா கைமாறாகச் செய்கிறது. வேண்டாமம்மா. நான் ஏழையிலும் பரம ஏழையான ஒரு ஸ்திரி கடவுளின் சோதனைக்கு ஆளாய் உற்றார் உறவினர் எல்லோரையும் இழந்து துக்க சாகரத்தில் மூழ்கி அநாதையாய்க் கிடந்து புழுவிலும் கேடாய்த் தவிப்பவள் ஆய்விட்டது. என் உயிர் நீங்கும்படியான காலம் நெருங்கிவிட்டது. அநேகமாய் இன்னம் பதினைந்து தினங்களில் என் உயிர் இந்தப் பாழுடம்பை விட்டு நீங்கிவிடும். என் துயர மூட்டை என் தலையோடு ஒழியட்டும், அதை உங்களுக்கு மாற்றிவிட்டுப் போவது மகா பாதகமான செய்கை. நான் என் வரலாற்றைச் சொல்ல வில்லையே என்று நீங்கள் யாரும் என்மேல் அருவருப்புக் கொள்ளக் கூடாது’ என்று நிரம்பவும் உருக்கமாக மனநைந்து கூறுவாள். கண்களிலிருந்து கண்ணிர் மாலை மாலையாகப் பெருகும். அதைக்கண்டு மற்றவர் சகியாமல், “சரி; ஏற்கெனவே விசனக்கடலில் மூழ்கி இருக்கிறவர்களை நாமேன் வருத்த வேண்டும்” என்று நினைத்து அவர்கள் மெளனமாக இருந்து விடுவார்கள். கற்பகவல்லியம்மாள் விடியற் காலையிலேயே ஸ்நானத்தை முடித்துக் கொள்வதும், பிறகு நாள் முழுதும், “பகவானே என்னப்பனே! பரம புருஷா பரந்தாமா தீனரr.கா: என்னை வெகு சீக்கிரம் உன் பாதார விந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பனே!” என்று ஒயாமல் ஜெபம் செய்து உருகுவதுமாய் தூரமான ஒர் மூலையில் உட்கார்ந்திருப்பாள். டிப்டி கலெக்டரது வீட்டார் ஆயிரம் தரம் வேண்டிக் கொண்டால், மரியாதைக்கு இரண்டு கவளம் போஜனம் செய்து அவ்வளவோடு திருப்தி யடைந்து மறுபடியும் ஜெபத்தைத் துவக்கிக் கொள்வாள்.