பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்த கலசம் - 25i

வெள்ளிக்கிழமை மாலையில் டிப்டி கலெக்டரும், அவரது குடும்பத்தினரும் கற்பகவல்லியம்மாளைச் சூழ்ந்து அவளது வரலாற்றை அறிய முயன்றிருந்த தருணத்தில் சேவகன் உள்ளே வந்து, ‘வாசலில் யாரோ ஒர் அம்மாள் வந்திருக்கிறார்கள். நம்முடைய குணவதியம்மாளைப் பார்க்க வேண்டுமென் கிறார்கள்” என்றான்.

அதைக்கேட்டு எல்லோரும் அபாரமான மகிழ்ச்சியும் குதுகலமும் அடைந்து தாம் அறிய ஆவல் கொண்டிருந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ள வழி ஏற்பட்டதென்று நினைத்து, அந்த அம்மாளை உள்ளே அழைத்து வரச் செய்தனர். கற்பக வல்லியம்மாளும் திடுக்கிட்டு தன்னைத் தேடிக்கொண்டு அவ்வளவு தூரம் யார் வரப் போகிறார்களென்று சந்தேகித்த வண்ணம் ஆவலோடு வாசற்படியைப் பார்க்க, அடுத்த நிமிஷம் பூஞ்சோலையம்மாள் நிரம்பவும் ஆவலோடு அங்குமிங்கும் பார்த்தபடி உள்ளே வந்து, கற்பகவல்லியம்மாளைக் கண்ட வுடனே, மற்றவர் இருந்ததைக்கூட மறந்து, ‘அம்மா! எங்களை விட்டு இப்படித்தானா வந்து விடுகிறது! நாங்கள் உங்கள் விஷயத்தில் கொஞ்சமும் தவறு செய்யவில்லையே! ஐயோ அம்மா என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள் தங்கமான மனசையுடைய நீங்கள், நாங்கள் எல்லோரும் நடுங்கும்படியான பெரிய காரியத்தைச் செய்துவிட்டீர்களே! என்று கூறி அபாரமாகப் பொங்கிய மனவெழுச்சியடைந்து ஆநந்த பாஷ்டத்தைச் சொரிந்த வண்ணம் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து ஆசையோடு கற்பகவல்லி யம்மாளைக் கட்டித் தழுவ, அவ்வாறு மின்னல் தோன்றி மறையும் நேரத்தில் சிறிதும் எதிர்பாராத நிலைமையில் அந்த அம்மாளைக் கண்ட கற்பகவல்லியம்மாள் வாய்திறந்து பேச மாட்டாமல் கோவென வாய்விட்டுக் கதறியழத் தொடங்கி விட்டாள். பூஞ்சோலையம்மாள் தன் மனசை சாந்தப்படுத்திக் கொண்டதோடு கற்பகவல்லியம்மாளுக்கும் உபசார வார்த்தைகள் கூறி சமாதானப்படுத்திவிட்டு, கற்பகவல்லியம்மாள் சென்னையை விட்டு வந்தது முதல் அந்த நிமிஷம் வரையில் நிகழ்ந்த விஷயங்கள் யாவற்றையும் விரிவாக எடுத்துக் கூறினாள்.

தனது புதல்வன் நிரபராதியென்று மெய்ப்பிக்கப்பட்டதை யும், அவன் விடுதலை பெற்றதையும், தன் விஷயத்தில் குடிகாரத் துருக்கனால் ஏற்பட்ட மானபங்கம் நிவர்த்தியானதையும்,