பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 செளந்தர கோகிலம்

இருக்க வேண்டும்! சோற்றுக்குக் கேடும் பூமிக்கு பாரமுமாய் நாமும் இருக்கிறோமே! தோன்றில் புகழொடு தோன்றுக அஃதிலார், தோன்றலின் தோன்றாமை நன்று என்று திருவள்ளு வர் கூறியுள்ளபடி நாம் இருப்பதும் ஒன்றே இறப்பதும் ஒன்றே: என்று கூறி நெடுமூச்செறிவர்.

அவர்களை விடுத்து, நாம் ராஜாபகதூரையும் கோகிலாம்பாளையும் குறித்துச் சொல்வதென்றால், அதற்குப் போதிய இடம் இச்சிறிய புஸ்தகத்தில் அகப்படாதென்றே கூறவேண்டும். தன்னைக் கணவனென்று வரித்தபிறகு, தான் சிறைச்சாலை தண்டனை அடைந்தாலும், ஏழ்மை நிலைமையை அடைந்தாலும், துர்நடத்தை உடையவனாய் இருந்தாலும், மற்ற உறவினர் இகழ்ந்து விலக்கினாலும், அவைகளையெல்லாம் பொருட்படுத்தாது முடிவுவரையில் ஒரே உறுதியாயிருந்த தனது அருங்குண மனையாட்டியான கோகிலாம்பாளை நமது ராஜாபகதூர் எவ்விதமாக மதித்திருப்பான் என்பது நாம் கூறாமலே விளங்கும். அவன் அடிக்கடி அவளைப் பார்த்து, ‘ஈசுவரனுடைய நாமத்தை ஸ்தோத்திரம் செய்வதைத் தவிர, எனக்கு தேவேந்திர பதவி கிடைத்தாலும், அதை நான் வேண்டேன்’ என்று ஆழ்வார் பாடியிருக்கிறார். அதைப்போல, ‘சதா சர்வதா உன்னை நினைத்து உன் கலியாண குணங்களை மனனம் செய்து உன் முகத்தைப் பார்ப்பதே தேவர்கள் அமிர்த பானம் செய்து பசி தாகம் களைப்பு முதலியவற்றை உணராமல் ஒரே ஆநந்தமயமாய் நிறைந்திருப்பதுபோல என்னையும் தேவர்களுடைய நிலைமையில் வைத்திருக்கின்றன! என் மாணிக்கக் கட்டியே! நானும், என் முன்னோர்களும் செய்த தவப்பயனே உன் வடிவமாய் வந்திருக்கிறது” என்று அவளிடமே கூறி அடிக்கடி தன்னை மறந்து வாய் கூசாமல் அவளை அபாரமாக ஸ்தோத்திரம் செய்யத் தொடங்கி விடுவான். ஆகவே, அவர்களை விடுத்து, நாம் செளந்தரவல்லியையும் அழகிய மணவாளரையும் கவனித்தால் அவர்களிருவரும் ஒருவருக்கொருவர் முற்றிலும் பொருத்தமான ஜோடிகளாகவே இருந்தனர். அவர்கள் குபேர சம்பத்தில் கிடந்து இன்பசாகரத் தைக் கடைந்து வெண்ணெய் திரட்டி அதன் சுகம் இவ்வளவு தான் என்பதைக் கரைகண்டு தீர்த்துவிட்டனரென்று கூறுவதே