பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 33

அவரது நீண்ட தாடியை செளகரியமாகப் பிடித்து உலுக்க ஆரம்பித்தனர். சிலர், “அடிக்க வேண்டாம், அடிக்க வேண்டாம்; மனிதன் திருடனாயிருந்தாலும், அவனுடைய காஷாய வஸ்திரத் துக்கும் திருவோட்டுக்கும் நாம் கொஞ்சம் மரியாதை பார்க்க வேண்டும். அடிக்க வேண்டாம். பாவம் பாவம். பேசாமல் போலீசாரிடம் ஒப்புவித்து விடுங்கள்’ என்றனர். சிலர், “யார் வீட்டுக் குழந்தையின் நகையப்பா அது?’ என்றனர். வேறு சிலர், “இதோ பாரப்பா, நம்முடைய மேலப் பண்ணை முதலியாருடைய குழந்தையின் கழுத்திலிருந்த சங்கிலியை அல்லவா அறுத்து விட்டான். இரும்பை வெட்டும் கெட்டியான கத்திரியைப் போட்டு வெட்டியிருக்கிறான் போலிருக்கிறதப்பா சரடு இரண்டு துண்டாப் போயிருக்கிறது. இன்னொரு துண்டு போன இடந்தெரியவில்லை. தேடுங்கள். ரஸ்தாவில் விழுந்து கிடந்தாலும் கிடக்கலாம்!” என்றனர். +

உடனே பலர் கீழே குனிந்து ரஸ்தாவில் தேடிப் பார்க்கத் தொடங்கினர். கதறியழுது கொண்டிருந்த குழந்தையைச் சமாதானப்படுத்தியபடி அதன் தாய், “அடெ பாவி! குழந்தையின் கழுத்து வீங்கிப் போய்விட்டதே! இரத்தங்கூடக் கசிகிறதே! ஐயோ! என் தங்கம் வலியைத் தாங்கமாட்டாமல் துடிக்கிறதே! நான் என்ன செய்யப் போகிறேனப்பா திருடனை விடாதீர்கள். அடடா, குழந்தையின் கை விரலிலிருந்த வைர மோதிரம்கூட இல்லையே! அதையும் எடுத்துக் கொண்டிருக்கிறானே! ஐயோ! அது ஐந்நூறு ரூபாய்க்குப் போன மாசத்தில்தான் வாங்கினது. தங்கச் சங்கிலியின் முகப்பு மாத்திரம் இரண்டாயிரம் ரூபாயா யிற்றே. முகப்பு இருக்கிறதா பாருங்கள்” என்று கூறித் தனது கைகளைப் பிசைந்துகொண்டு நிரம்பவும் பரிதாபகரமாக அழுத வண்ணம் குழந்தையைச் சமாதானப்படுத்த ஆரம்பித்தாள்.

அந்த ஸ்திரீயின் உடம்பிலும் குழந்தையின் உடம்பிலும் விலையுயர்ந்த ஏராளமான ஆபரணங்கள் காணப்பட்டன. அவள் ஒரு பெரிய செல்வந்தரது மனையாட்டியென்பது பார்வைக்கே தெரிந்தது. அந்த ஊரில் மேலப்பண்ணையென்பது வெற்றிலைத் தோட்டங்கள் யாவும் அடங்கிய பாகம். அது சுமார் லக்ஷம் ரூபாய்பெறத்தக்க பெரிய ஐவேஜி. அதன் சொந்தக்காரருக்கு வருஷத்தில் Q&.65m. IV-3