பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரவான் & 113 - 'வந்ததுதான் வந்தியே, சும்மாப் போனியா? மடிலே ருந்து பிடி கடலைக்காயை எடுத்து இந்தான்னே, சிரிச்சுக் கிட்டே நான் நினைவு மங்கிப்போய் உன் கையைப் பிடிச் சேனே! கையை உதறி என் கன்னத்திலே ஏன் ஒண்ணு விடலே? அப்படியே என் தோள் மேலே சாஞ்சுட்டே அண்ணக்கின்னு நெலவு ஏன் அப்படி காயனும்! ஆத்தோரத்துக்கப்பால் சினிமாக் கொட்டகைலேருந்து அம்பிகாபதிப் பாட்டு காதண்டை மோதி ஆளை ஏன் அப்படிச் சொக்கடிக்கணும்!” - நான் என்னாத்தெக் கண்டேன்? பிள்ளைப்பூச்சி உடனே கடிச்சுடும்னா கண்டேன்! இந்தப் புள்ளையப்பத்தி அப்பொ நெனச்சமா? வவுத்தெ எத்தனை நாள் மறைச்சு வைக்க முடியும்? - உடலும் மனசும் ஒண்ணாக் கொழஞ்சு நாம் ஆசையாப் பெத்த குளந்தையை உலகத்துலே எல்லாரும் பெத்து வளக்கற மாதிரி வளக்க முடியல்லே. களுத்துலே மஞ்சக்கவுறு ஏர்றதுக்கு முன்னாலே வவுத்துலேருந்து இறங்கற குளந்தையெ யார் மதிக்கிறாங்க? திருட்டுப் புள்ளைன்னு ஊரெல்லாம் சிரிக்க மானம் போய் உசிர் போகாமெ ஊரைவிட்டு ஒடியாந்துட்டோம். வந்து இங்கே மாட்டிக்கிட்டோம்.' - விதி-விதி: மனத்தின் பேச்சுக்கு முடிவே கிடையாது. அந்தக் குழந்தையின் பசியை ஆண்பிள்ளை தானாக எவ்வளவு தூரம் சமாளிக்க முடியும்? அவள் மாலையில் வந்து ஒருவேளை ஊட்டுவாள்; காலையில் மாவையும் தண்ணிரையும் கரைத்துப் புட்டியில் போட்டுவிட்டுப் போவாள். புட்டியை எந்தப் பக்கம் குழந்தையின் வாயில் வைப்பது என்றுகூட அவனுக்குத் தெரியாது.