பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鹊4 * லா. ச. ராமாமிருதம் 'காலைலே வேலைக்கு அலையனும். கொளந்தையைத் தனியா விட்டுட்டு எத்தனை நேரம் வெளியிலே சுத்த முடியும்? மாலை வறது எப்போ? அவள் வறது எப்போ? அந்தக் கொளந் தையை அவள் மார்மேலே அணைப்பது எப்போ? தொண்டை யைக் கிளிச்சுக்கிட்டு ஒயாமெ அலறும் அதன் அலறல் ஒயறது எப்போ? ஒரே வேளையானாலும் பெரிய வேளை!’ இன்று அவள் குழந்தை தலைமீது மேலாக்கைப் போட்டு மூடியும் அதன் கத்தல் ஓயவில்லை. அவனுக்கு வயிறு கொதித்தது. 'ஏன் ஏமாத்தறே? நீ வந்து ஊட்டறது ஒரு வேளை. அதிலே ஏன் வஞ்சனை பண்ணறே? பங்களா வீட்டுப் பையன் மாதிரியில்லையா நீ பெத்த மவன்?” "ஏன் இப்படியெல்லாம் பேசறே? நான் என்ன பண்ணு வேன்? அந்தப் பையன் என்னை அட்டை மாதிரி உறிஞ்சிப் போடுதே. ஊறக்கூட நேரம் விடமாட்டேன்னுதே. மூக்காலே பாலு வந்தாலும் வச்ச வாய்க்கடி விடமாட்டேன்னுதே!” “இங்கேயும் இருக்குதேன்னு கொஞ்சம் வெச்சுக்கிட்டு வர்றது.” “அவங்கதான் என் எதிரேயே உக்காந்து கவுனிக் கிறாங்களே! மடியிலே புள்ளையை விட்டுட்டு அந்தப் பெரியம்மா என் எதிரே சட்டமா குந்திக்கறாங்க. "கொடுடீ, கொடுடீ குழந்தைக்குக் கொடுடீ. இந்தப் பக்கம் வத்திப் போனா அந்தப் பக்கம் மாத்திப் போட்டுக்கோன்னு ஈவு இரக்கமில்லாமெ பேசறாங்க” “சோத்திலே நெய்யைக் கைநிறையா அள்ளித்தானே விடறேன்! ஆப்பிள் பழமும் ஆரஞ்சிப்பழமுமா வாங்கி வாங்கிக் கொடுக்கல்லே! என் எதிரிலேயே உரிச்சித் தின்னுட ணும். என் குழந்தைக்கு ஊறும் பாலை என் குழந்தைதான் குடிக்கணும். என் வீட்டுக்கே ஒரு குழந்தைடீ-”