பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 & லா. ச. ராமாமிருதம் பிடிக்கிறான். புதுப்புதுக் கண்டங்களைக் கண்டிருக்கிறான். அநேகமாய் இப்பூமியில் கண்டறிய வேண்டியவைகளை யெல்லாம் கண்டுவிட்டான் என்றே சொல்லலாம். ஆனால், இன்னமும் அவன் இவ்வானையும் நீரையும் சரியாய் அளந்த பாடில்லை என்றே என் அபிப்பிராயம். இன்னமும் இச் சமுத்திரத்தில் அவன் மனத்திற்கும் பார்வைக்கும் எட்டாத ஜந்துக்கள் வேண்டியன புதைந்து கிடக்கின்றன. எனக்கு என்ன தெரியுமா ஆசை? என்றேனும் இக்கரையினின்றும் இப்படியே நடந்து ஜலத்துள் போய் உயிருடனும் நினைவுடனும் இருக்க வழி யாதேனும் இருந்தால், அவ்வுலகத்தைக் காணவேண்டு மென்கிற ஆசைதான். "நான் பட்டணம் வந்து பத்து வருஷங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னமும் சமுத்திரம் பார்த்த ஆச்சரியம் எனக்குத் தணிந்தபாடில்லை. எத்தனை பேர் கிறிஸ்துமஸ் லீவு என்றும் பொங்கல் விடுமுறையென்றும் பட்டணத்துப் புதுமைகளைப் பார்க்க வேண்டுமென்று வருகிறார்கள். பட்டனத்திலும் நாளுக்கு நாள் ஒரு புதுமை இருக்கிறது. ஆனால் அப்புதுமைகளெல்லாம் புளித்துவிட்டன. இச்சமுத்திரத்தின் புதுமை எனக்குத் தணிந்தபாடில்லை.” பூர்வா மெளனப் புன்னகை புரிந்தாள். நான் மேலும் பிதற்றிக்கொண்டே போனேன். "நான் முதல் முதல் பட்டணம் வந்ததை உன்னிடம் சொன்னேனோ? நான் கிராமத்திலிருந்து ஓடிவந்து விட்டேன். ஒருநாள் என் பாட்டி எல்லாக் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு ஏதோ ஒரு ராஜகுமாரன் கதை சொன்னாள். அவன் யாரோ ஒரு ஜலகன்னியை மணந்துகொண்டானாம். அவளை முதன் முதலில் எப்படிப் பார்த்தானென்றால், உச்சி வெய்யில் வேளையில் சமுத்திரத்தில் இருந்து அவள் வெளிப்பட்டுக் கரைக்கு வந்து, வெய்யிலில் காய்ந்துகொண்டிருந்தாளாம்.