பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

金 $22 * லா. ச. ராமாமிருதம் பூர்வா அவளுடைய புரியாப் புன்னகை புரிந்தாள். “பட்டப் பகலில் ஒரு படகடியில் படுத்துக்கொண்டு காத்துக்கொண்டிருந்தேன். அலைகள் மலைகள் போல் எழும்பி, சிகரத்தில் நுரையைக் கக்கின. நுரைமேல்.’ "பூர்வா! பூர்வா!' பூர்வாவின் செவியில் என் வார்த்தைகள் ஏறவில்லை. அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த ஒரு செம்படவனின் செய்கைகளில் அவள் கவனம் நழுவிவிட்டது. கடற்கரையில் எங்கள் மூவரைத் தவிர வேறு யாரும் இல்லை. வெகு நிதானமாய் அவன் ஒரு நண்டைத் தூண்டிலில் ஏற்றி ஜலத்தின் மேல் வீசி எறிந்துவிட்டு, யோகத்தில் ஆழ்ந்த மூர்த்திபோல் அசைவற்று மெளனமாய் மீனின் வருகைக்குக் காத்துக்கொண்டு நின்றான். அவ்வளவு தூரத்தில் இருக்கும் முள்ளில் மீன் மாட்டிக்கொண்டது அவனுக்கு எப்படித் தெரிந்ததோ! கரகர வென்று இழுக்கும் கயிற்றின் நுனியில் ஒரு சாண் நீளத்துக்கு ஒரு மீன் துடித்துக்கொண்டு. அதைக் கழற்றி, இடையில் கட்டியிருக்கும் ஒலைக் கூடையில் போட்டுக்கொண்டான். கூடைக்குள் படபடவெனச் சப்தம். திடீரென்று பூர்வா அவனை அணுகிக் கூடையைத் திறந்து காண்பிக்கச் சொன்னாள். அவன் ஏதோ முணுமுணுத் தான். "பார்த்தால் பார்ப்பாரு மாதிரி இருக்குதே!” என்று சொன்னான் போலிருந்தது. கூடைக்குள் இரண்டு மீன்கள் கூடை வாயை எட்டி எட்டி உயிர்மூச்சுக்குத் தாவித் துடித்துக்கொண்டிருந்தன. போய்க்கொண்டிருக்கும் உயிரில் மலர்ந்துபோன அழகிய விழிகள் ஒன்றுடன் ஒன்று இடித்துக்கொண்டு, ஆவ், ஆவ்' என்று வாயைத் திறந்தவாறு மூச்சுக்குத் தவித்துக் கொண்டு.