பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூர்வா & fá; “என் வயிற்றில் ஏதோ பெரிய யுத்தம் நடந்துகொண்டிருக் கிறது என் அப்பாவும் அம்மாவும் சண்டை போடுகிற மாதிரி.” வலியின் ஜன்னியில் இப்படிப் பிதற்றுகிறாளா? அப்பாடா! இதோ ஆஸ்பத்திரி வந்துவிட்டது. அவளை அழைத்துக்கொண்டு உள்ளே போனார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் நர்ஸ் ஒருத்தி அவள் புடைவையைச் சுருட்டிக்கொண்டு வந்து காரின் பின்வnட்டில் எறிந்தாள். டாக்டர் என்னைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார். "இப்பொழுதுதான் முதல் தடவையோ?” . பரபரக்க வாசலில் உலாவினேன். இவர்களுக்கெல்லாம் கேலியாகத்தானிருக்கும். இப்பொழுது என் தவிப்பு அதிகமா? அவள் தவிப்பு அதிகமா? - திடீரென்று அவளுடைய வீறல் நிசப்தத்தை வெட்டியது. என் வயிற்றைச் சுருட்டியது. வலி கடைசியில் அவளை வெற்றி கொண்டுவிட்டது. இன்னொரு வீறல். இன்னும் ஒன்று. ஒவ்வொரு வீறலுக்கும் என் இதயம் பாளம் பாளமாக வெடிப்பதை நானே உணர்கிறேன். ஆயினும் வலி அவளைக் கடைசியில் வெற்றி கொண்டதைப் பற்றி எனக்கு உள்ளுறக் கவலை கழிந்தாற்போலவே தோன்றுகிறது. பூர்வாவும் என்மாதிரி, சாதாரணப் பிறவிதான். அவளுக்கும் வலி, உணர்ச்சி எல்லாம் உண்டு. இனி என்மாதிரி அவளும் ஆகி விடுவாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் குழந்தை பிறந்ததும் எங்களிருவருக்கும் சந்தோஷம்தான். நர்ஸ் வெளியே ஒடிவந்தாள். “டாக்டர்-டாக்டர்" டாக்டர் பரக்கப் பரக்க உள்ளே ஒடுகிறார். என்னையுமறியாமல் என் உடல் அவரைப் பின்தொடர முயல்கிறது. “ஸில்லி!” என்று என்னைப் பிடித்து அவர் வெளியே தள்ளுகிறார். முகத்தைக் கையில் பிடித்துக்கொண்டு வாசற்