பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஹாபலி சாவு சாலையோரத்தில் ஒரு மாமரம். மாமரத்தடியில் ஒரு குளம். குளக்கரையில் ஒருவன் விழுந்து இறந்து கிடந்தான். வியாதியில்லை, வெக்கையில்லை. கைகள் முஷ்டித்திருந்தன. சாவைத் திடீரென்று சந்தித்த பயங்கரத்தில், கண்கள் ஆகாயத்தை அண்ணாந்து நிலைகுத்திப் போயிருந்தன. வாழ்க்கையின் முழு நம்பிக்கையை அந்த வாழ்க்கையின் முடிவு முறியடித்த கோரக் களை முகத்தில் கூத்தாடியது. போகப் போக, ஒரு காகம் பறந்து வந்து நெற்றியில் உட்கார்ந்து கண்ணைக் கொத்த முயன்றது. பின்னாலேயே ஈக்கூட்டங்களும் எறும்புச் சாரிகளும் எங்கிருந்தோ புறப்பட் வந்து மூக்கிலும் வாயிலும் காதிலும் மொய்க்கத் தலைப் பட்டன. அவன் மார்பில் நிழல் தட்டியது. காகம் மேல் நோக்கி, 'கா' என்று கத்திக்கொண்டு பறந்தது. மேலே ஒரு பருந்து, இரவு போன்ற இறகுகளை அடிக்காது விரித்து. ஆகாயத்தில் செங்குத்தாய் நீந்திக்கொண்டிருந்தது. அவன் தன் சாவுக்குத் தயாராக இல்லாவிட்டாலும், மற்ற ஜீவராசிகள் அவன் மரணத்துக்குத் தயாராயிருந்தன. அவை களுக்கு அவன் வாழ்வில் நம்பிக்கையில்லை. அவைகள்