பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 : லா. ச. ராமாமிருதம் என்று எங்களைக் கையமர்த்தினார். பீதியால் நாங்கள் எல்லோரும் ஒண்ணாகி அந்தப் புடலங்காயையே பார்த்துக் கொண்டிருந்தோம். என்ன ஆச்சரியம்! அது தானே கழன்று, தரையில் விழுந்து, உயிரோடு சரசரவென ஊர்ந்துபோய் எட்டியிருக்கும் வாழைக்கன்றுகளிடையே மறைந்தது. அம்மா ஒரு தாவுத் தாவி அம்பியை அப்படியே வாரிக்கொண்டாள். எங்கள் கல்யாணி கன்னுக்குட்டியை உடம்பெல்லாம் நக்கிக்கொடுத்து முகர்ந்து பார்ப்பதுபோல், அவள் மூர்க்கமாய் எதையோ தேடுவதுபோல் அம்பியை உடம்பெல்லாம் தடவிப் பார்த்தாள். அம்பிக்கு ஒரே வெட்கமாய்ப் போயிற்று. "எங்கேயாவது பட்டுதாடா கண்ணே? சுப்ரமண்யா என் வயத்துலே பாலை வார்த்தயா? அதற்குள்ளே சமாச்சாரம் பக்கத்திலே பரவிவிட்டது. என்னென்னவோ நினைத்துக் கொண்டு, ஒவ்வொருவராக வர ஆரம்பித்துவிட்டார்கள். அம்மாவை உபசாரம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். “என்னடி அன்னபூரணி وهي “என்னடா அம்பி?” அப்பா இதற்குள் சமாளித்துக்கொண்டுவிட்டார். “ஏண்டா, அம்பிவால்! சங்கராந்தியின் சக்கரைப் பொங்கலையும் வடையையும் கெடுக்க இருந்தையே எவ்வளவு சாமான் உன்னால் வீணாப் போயிருக்கும் ஏண்டி, இவன் வாயைப் பிளந்திருந்தால், இவனுக்கு இப்போ புதைக்கிற வயசா, எரிக்கிற வயசா?” - - அம்மா சீறினாள். 'போறுமே உங்கள் விகடம்!” இந்தச் சந்தடியில் கன்றுக்குட்டி தும்பையறுத்துக் கொண்டு விட்டது. நான் ஒடிப்போய் அதன் வாலைப் பிடித்துக்கொண்டு கல்யாணியிடம் போகவொட்டாது தடுக்க முயன்றேன். ஆனால்