பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

豁2 * லா. ச. ராமாமிருதம் கிட்டு வேடிக்கை பாக்க நின்னா. இவளை ப் பாத்ததும் நானும் பந்தயத்துலே கலந்துக்கிட்டேன். கையை நீட்டி மணிக்கட்டு மேலே கருப்பங்கணுவை வெச்சுக் கத்தியெக்கூட ஓங்கிட்டேன். அப்போ என் போறாக்காலம் இவளை லேசா ஒரக்கண்ணாலே பாத்தேன். இவ எண்ணத்துலே இப்போ நான் எவ்வளவு பெரிசாயிருக்கேனின்னு பாக்கணும்னுதான் வச்சுக்கயேன். எல்லாருக்கும் இருக்கற எண்ணம்தானே! அப்போ இந்த சூனியக்காரி பல்லுலே விரலை வெச்சுக் கடிச்சுக்கிட்டு சிரிச்சா! கைமேலே கத்தியிறங்கிட்டுது!” நான் கண்ணை இறுக மூடிக்கொண்டு காதைப் பொத்திக் கொண்டேன். என் உடல் குலுங்கிற்று. அவன் சிரித்தான். “எனக்கு எப்படியிருக்கும்னு கண்டுக்கோ தம்பி! மூணு மாசம் ஆஸ்பத்திரியிலே கிடந்தேன். கத்தி துருப்பிடிச்ச கத்தி. கையிலே வினை வெச்சுட்டுது. புரை முழங்கை வரைக்கும் கடகடன்னு ஓடிப்போச்சு. முழங்கைக்குக் கீழே வெட்டி யெடுத்துட்டாங்க. கை போயிரிச்சு கையோடு கண்ணாலத் துக்குச் சேத்து வெச்ச பணமும் போயிரிச்சு! இன்னும் புண்ணு கூட ஆறல்லே. ஆஸ்பத்திரியிலேருந்து நான்தான் மிச்சமாத் திரும்பி வந்தேன். "இதுக்குள்ளே, இவ வீட்டுலே என்னென்னவோ வேலைத் தனமெல்லாம் நடந்துகிட்டிருந்துது. எனக்குத் தெரியாமே போச்சு. இவ அப்பன்காரக் கிளவன் ரெண்டு தடவை ஆஸ்பத்திரியிலே என்னைப் பாக்க வந்திருந்தான். வண்டயம் மாதிரி திருட்டு முளி முளிச்சுட்டு, வாயைத் துறக்காமெ போயிட்டான். நான் என்னாத்தைக் கண்டேன்? திரும்பி வந்தாத்தானே தெரியுது. இவுங்க ஏற்பாட்டின் துருசெல்லாம்! "நான் ஆனா சும்மா விடல்லே! நியாயமாத்தான் நடந்து கிட்டேன். இவ வீட்டுக்குப் போனேன். கிளவன் திண்ணையிலே குந்திக்கிட்டிருந்தான், பொக்கை வாயைக் குதப்பிக்கிட்டு.