பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 & லா. ச. ராமாமிருதம் யில்லை. எங்கள் கண்ணெதிரே பாவாடை கட்டி, சித்தாடை கட்டி, புடவை கட்டற வரைக்கும் வளந்துாட்டு இப்போ எங்கள் கண்ணிலே மண்ணைப் போட்டுட முடியுமா?" "இன்னும் எத்தனை நாள் மாமி காத்திண்டிருக்கிறது? இப்போ இப்படிச் சொல்றவா நீங்களே, இன்னுங் கொஞ்ச நாள் பொண்ணை வீட்டிலே வெச்சிண்டிருந்தோமானால், வேறே தினுசாப் பேசுவேள். நாங்கள் இப்போ இருக்கிற நிலையிலே இதுக்கு மேலே வீங்கறத்துக்கில்லை. இப்போ படற கடனையே சந்துரு தலையெடுத்துத்தான் அடைக்கனும், இத்தோடே போகல்லையே- அவனுக்கு இன்னும் ரெண்டு தங்கை இருக்காளே-” - "இருந்தாலும்-” "அதெல்லாம் என்னத்துக்கு மாமி? ஆண் பிள்ளைக்கு அழகென்ன வேண்டியிருக்கு? எங்கேயாவது மானமாய் வயத்தெ அலம்பிண்டு தீர்க்காயுசா இருந்தாப் போறும்-” "தீர்க்காசுயாய் என்ற பதத்தொடர் பட்டவுடனே ஜானாவின் மனக்கண்ணெதிர் காட்சி மாறியது - அப்பொழுதுதான் சேவல் கூவி ஒய்ந்தது. வாசற் கதவை யாரோ படபடவெனத் தட்டுகிறார்கள். ஏற்கெனவே ஏதோ வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு கண் விழித்திருக்கும் அவள் ஒடிப்போய்த் திறக்கிறாள். வாசலில் சைக்கிளில் ஒருவன் கையில் ஒரு சீட்டைப் பிடித்துக்கொண்டு நிற்கிறான். “இது 23ஆம் நெம்பரா? ஆஸ்பத்திரியிலேருந்து வரேன். மெட்டர்னிடி வார்டுலே, 13ஆம் நெம்பர் பெட் பேஷண்டு தவறிட்டுது, அம்மா-” "ஐயோ po