பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 : லா. ச. ராமாமிருதம் ஸ்தாபிதம் செய்துகொள்ள ஆரம்பித்துவிட்டாள். என்ன வென்றுதான் புரியவில்லை. காரியங்களில் அசிரத்தைக்குக் கண்டித்தாலோ, கோபித்தாலோ வாய் திறவாள். வாசலில் ஜன்னலுக்குப் போய் அடிக்கடி நின்று தெரு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பாள். அரைமணி நேரத்திற்கு ஒருமுறை குழாயடிக்குப் போய் முகம் கழுவிக்கொள்வாள். எஞ்சிய பொழுதுக்குத் தன் பெட்டியிலிருக்கும் சாமான்களைக் கலைத்துப் புதுப்புது விதமாய் அடுக்கிக் கொண்டிருப்பாள். அதிலிருக்கும் நோட்டுப் புத்தகத்தில் ஏதோ குறித்துக் கொண்டிருப்பாள். சந்துருவின் அம்மாவுக்கு இதெல்லாம் புதிதாயிருந்தது. பிடிக்கவும் இல்லை. அவள் அப்படி ஒன்றும் பழங்காலத்து மனுஷியல்ல; ஆசாரக் குடுக்கையுமல்ல. ஆனால் என்னதான் புது சம்பந்தமாயிருந்தாலும், நாட்டுப்பெண்ணின் சில பழக்க வழக்கங்களை அவளால் ஜெரித்துக்கொள்ள முடியவில்லை. “என்னடி கெளரி, அரைமணி நேரத்துக்கு ஒரு தடவை அலங்காரம்? நெத்திக் குங்குமத்தை நீ அடிக்கடி கலைச்சுக்கிறது எனக்குப் பிடிக்கல்லே. பூர்வ கர்ம வினையாலே தாயும் பெண்ணுமா நாங்கள்தான் அதை இழந்துட்டு நிக்கறோம். 'பளிச்'சுன்னு முகத்துலே பத்தும்படி மஞ்சள் பூசிக்க மாட்டையா? நீ இனிமே வெள்ளைப்புடவை கட்டாதே-” “எங்காத்துலே-” “உங்காத்துக்கு இதைக் கொடுத்தனுப்பிச்சுடு.” “எங்காத்துலே-” "இதோ பார் கெளரி, உங்காத்துலே அப்படியிருப்பேன், இப்படியிருப்பேன் இதைப்பத்தி என்னிடம் இனிமே சொல்லாதே. இனிமே நீ இந்தாத்து மனுஷி, அதனாலே இந்தாத்துப் பழக்க வழக்கங்களைச் சுருக்கப் படிச்சுக்கோ. தெரியாட்டா எத்தனை தரம் வேனுமானாலும் சொல்லித்