பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 & லா. ச. ராமாமிருதம் சுத்த அல்பம். மானங்கெட்ட உலகம். உட்கார்ந்து கொள் வேனுமானால் இங்கேயே கொஞ்சநாழிகை படுத்துக்கொள்:” ஜானாவுக்கு மார்பு பக்பக்கென அடைத்தது. "இல்லை லிஸ்டர்; நான் வீட்டுக்கே போறேன்-” "ஜானா, இதெல்லாம் நீ சமாளித்துக்கொள்ள வேண்டும் நீ இவ்வளவு கோழையாயிருப்பாய் என்று தெரிந்தால் நான் உன்னைக் கூப்பிட்டே இருக்க மாட்டேன்." ஜானா போகும் வழியெல்லாம் குழந்தை மாதிரி விக்கி விக்கி அழுதுகொண்டே போனாள். தான் பண்ணின குற்றத் தான் என்ன? சந்துருவுடன் கூடப் பிறந்ததும், தான் கைம்பெண்ணாய் வீடு வந்து சேர்ந்துவிட்டதுந்தானே? அதன் அபாண்ட விளைவை எண்ணவே முடியவில்லை. அம்மாவுக்கு அவள் முகத்தைப் பார்த்ததும் ஒன்றுமே புரியவில்லை. “ஏண்டி ஜானா?” ஜானாவுக்கு அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. 'சந்துரு, ஜானா ஏனோ அழறாடா!” சந்துரு அறையிலிருந்து வெளிவந்தான். "ஏன் அழுகிறாய்?" ஜானா பதில் பேசாமல் அழுதுகொண்டிருந்தாள். அவளைச் சற்று நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்து விட்டு சந்துரு வெளியே சென்றான். அவன் திரும்பி எப்போது வந்தான் என அவளுக்குத் தெரியாது. குப்புறப் படுத்துக் கைகளிடை முகத்தைப் புதைத்துக்கொண்டிருந்தாள். "ஜானா, நீ எனக்கு ஒன்றும் சொல்ல வேண்டாம்!”அவன் குரல் நடுங்கிற்று. "நான் உன் பள்ளிக்கூடத்துக்குப் போய் வாத்தியாரம்மாளைக் கண்டு வருகிறேன். நான் எல்லாம்