பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரயில் வாழ்க்கையின் சிக்கலே போன்று தண்டவாளங்கள் பின்னியும் பிரிந்தும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும், அதற்கு அப்பாலும் ஒடுகின்றன. அங்கங்கே ஆப்பு அறைந்தாற் போன்று தந்திக் கம்பங்கள் நிமிர்ந்து நிற்கின்றன. இரு மருங்கிலும் வயல்களும், குன்றுகளும், மரங்களும், பாய்ந்து சுழன்று செல்கின்றன. ஒருசமயம் ஆகாயத்தின் முழு நீலம், ஒரு சமயம் அதில் அடித்த பஞ்சைப் போன்ற வெண்மேகம், ஒரு சமயம் அத்தனையையும் மறைக்கும் புகைப்படலம். இத்தனைக்குமிடையில், அத்தனையினதும் நடு நாடி போல், அலுப்பற்று ஒரே நிதானமான வேகத்தில், ஒரு ரயில் வண்டித் தொடர், மரவட்டை போல் நெளிந்து நெளிந்து, விரைந்து செல்கிறது. 'ஜன்னலைத் திற!” 'இல்லேடா கண்ணா- அங்கே உட்காரப்படாது.டா-' "மாட்டேன்- அங்கேதான் உக்காரணும்- நான் ஜன்னல் வழியாப் பாக்கணும்- ஐயோ- அம்மா இதோ பாரேண்டிஅக்கா திறக்க மாட்டேங்கிறாடி!” 'சனி தொலையட்டும் திறந்துவிட்டுடேண்டி எப்படி யாவது அழாமலிருந்தால் போறும்-”