பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 * லா. ச. ராமாமிருதம் இலைகள் பலபலவென உதிர்ந்தன. ஒன்றாயும், இரண்டாயும், கொத்துக் கொத்தாயும், திரையிட்டாற் போலேயும் உதிர்ந்தன. இலைகளும் சருகுகளும் நிலத்தையும் நிலத்தில் கிடந்தவற்றையும் ஜமக்காளம் போல் மூடின. அந்தக் கிழவி அங்கு வந்து எவ்வளவு நேரமாய் உட்கார்ந் திருந்தாள் என்றே தெரியவில்லை. மூப்பேறிய உடலில் புடைவை உடுத்திய மாதிரியே இல்லை. உடலுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாமல் தொங்கின மாதிரியே இருந்தது. முழங்காலைக் கட்டிக்கொண்டு, குந்திட்ட மாதிரி எங்கேயோ முறைத்துப் பார்த்தபடியே அசைவற்று உட்கார்ந்திருந்தாள். தள்ளாமையால் தலை மாத்திரம் கழுத்தின்மேல் நிலையற்று லொடலொடவென்று ஆடிற்று. இரவு இறங்கும் வேளைக்குக் கவலை தேங்கிய முகத்துடன் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு அங்கு ஒருவன் வந்தான். அவளைக் கண்டதும் காணாததைக் கண்டது போல் அவளிடம் ஓடினான். “எங்கெங்கெல்லாம் உன்னைத் தேடுவதம்மா? வா.” “நான் வரல்லை.” "என்னம்மா, நீ இப்படிப் பண்ணினால்?” “எனக்கு இனிமேல் உன்கிட்டே ஜோலி இல்லை.” 44لیہ |ம்மfr po "சீ என்னை இனிமேல் அம்மா அம்மான்னு கூப்பிடாதே!” - pν "ஐயையோ "இந்த வேஷம் எதுக்குடா? பெத்த வயிறு கொதிக்கப் பார்த்தவனெல்லாம் இதுவரை உருப்பட்டதில்லே. ஊருக் கெல்லாம் மேருவாயிருந்தாலும் எனக்கு நீ பிள்ளைதானேடா?