பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

36

தும் செய்யக்கூடாது என்று தமது பக்தகோடிகளுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்,

"இவையெல்லாம், ஏதோ தற்செயலாக நடக்கிறவைகளல்ல.

பெரியார் போராட்டத்தின் அடிப்படைக் கொள்கை எப்படி பிற்போக்குச் சக்திகளுக்குப் பலத்தை தேடித்தருகிறது என்பதையே இவை எடுத்துக் காட்டுகின்றன என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன்.

"நான் ஏற்கனவே கூறியதுபோல், மேற்படி வெறிச்செயல்களைத்

தடுத்து நிறுத்த வேண்டிய கடமை, நாட்டின் நலனிலும், ஜாதி ஒழிப்பிலும் நாட்டம் கொண்ட சகல பகுதி மக்களுடையவும் அவசர அவசியக் கடமை என்பதை எங்கள் மாநாட்டுத் தீர்மானம் சுட்டிக் காட்டுகிறது.

இதே பொழுதில், பிராமண நண்பர்களுக்கு ஒரு வார்த்தை ,

தி.க.வினரின் பலாத்காரத் தாக்குதலிலிருந்து, தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக பிராமணர் சங்கம் போன்ற ஜாதீய அடிப்படையில் புதிய சங்கங்களைத் தோற்றுவிக்கும் பாதை பெரிதும் உதவிகரமாக இராது என்பதை அவர்கள் நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி வேண்டிக்கொள்ளுகிறது. மீண்டும் ஜாதீய சங்கங்களை உருவாக்குவது, ஜாதீய உணர்வைப் போக்காது. மேற்படி வெறிச்செயல்களை முறியடிப்பதற்கான மக்கள் ஒற்றுமையை திரட்டாது. ஜாதீய சங்க அமைப்பில் சகல பகுதி மக்களுடைய ஒத்துழைப்பில்தான் இந்த வெறிச் செயல்களுக்கு வெற்றிகரமாக முடிவுகட்ட முடியும் என்ற அனுபவப் பூர்வமான உண்மை மறைக்கப்படுகிறது.

எனவே, பாதிக்கப்பட்ட நண்பர்கள், மேற்படி அநாகரீகப்

போக்கை, வெறிச் செயல்களை, எதிர்க்கும் எல்லாப் பகுதி மக்களோடும் ஒன்றுபட்டுப் போராடுவதுதான் நிலையான பாதுகாப்பை அளிக்கும் என்று அவர்களுடைய கவனத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி நிதானமாகக் கொண்டுவர விரும்புகிறது.

பிராமண இளைஞர்கள் முன்னணியில் நின்று, காலப்போக்கை உணர்ந்து இந்தத் திசையில், தங்களுடைய பங்கைச் செலுத்துவார் கள் என்று நம்புகிறேன்.
காமராஜரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் பொறுப்பு

இனி சர்க்காருடைய கொள்கையைக் கவனிப்போம். அண்மையில், ஜாதி வெறியைத் தூண்டிவிடும் போராட்டத்தை பண்