பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



37

டித நேரு, வன்மையாகக் கண்டித்தார் என்பது மெய், இந்தக் கண்டனம் மட்டும் போதுமா? இவ்வாறு வெறிச் செயல்கள் உருவாவதற்கு சர்க்காரின் கொள்கையும் குறிப்பிடத்தக்க அளவு காரணமாக இருக்கவில்லையா?

பெரியாரின் ஜாதி வெறிப் போக்குக்கு நேரடியாக இல்லாவிட்டாலும்

மறைமுகமாக காமராஜர் சர்க்கார் ஊக்கமளித்து வந்திருக்கிறது என்பது தமிழ் மக்கள் அறிந்த விஷயம்.

ஈ. வெ. ரா. காங்கிரசுக்கு தேர்தலில் ஓட்டு திரட்டிக் கொடுத்தார்.

ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு ஓட்டு திரட்டிக் கொடுத்தார். காங்கிரஸ் கட்சி அந்த ஜாதி வெறிப் பிரச்சாரத்தை கொஞ்சம்கூட எதிர்த்தது கிடையாது. இந்த சங்கதி காங்கிரஸ் மேலிடத்துக்குத் தெரியாதா? காங்கிரஸ் மேலிடத்துக்கும் இந்தச் சம்பவங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையா? அவ்வாறு யாரும் சொல்லிவிட முடியாது.

நேருவும் பொறுப்பே

பண்டித நேரு உட்பட, காங்கிரஸ் மேலிடம் இந்த மாதிரியான-- இந்த மாதிரியான கோடு கிழித்து கொள்ளுங்கள் ; காங்கிரஸ்-- தி. க. உறவுகளை அனுமதித்தே வந்திருக்கிறது.

இரண்டொரு உதாரணம் கொடுக்கிறேன். சென்ற பொதுத்

தேர்தலின் போது பண்டித நேரு சென்னையில் பேசினார். பக்கத்தில் காமராஜர் உட்கார்ந்திருந்தார். நேரு பேசும்பொழுது திராவிட இயக்கத்தை ஒட்டு மொத்தமாகக் கண்டித்துப் பேசத் தொடங்கினார். காமராஜர் தி.மு.கவை மட்டும் கண்டியுங்கள் என்று குறிப்பிட்டார். அந்தத் திருத்தத்தோடு, பின்னர் தன் பேச்சில் தி. க வை விட்டு விட்டு தி. மு. க. வையே தாக்கிப் பேசினார். இது எதைக் காட்டுகிறது. இது அரசியல் சந்தர்ப்ப வாதத்தைக் காட்டவில்லையா? இது ஒன்று......

கேரளத்தில் லீகுடன் குலாவினார்கள்
கேரளத்தில் கம்யூனிஸ்ட் மந்திரி சபை ஏற்படுத்துவதற்கு

முன்,ஒரு பொதுத் தேர்தல் ஏற்பட்டதல்லவா? அந்தத் தேர்தலின் போது பண்டித நேரு அங்கு சென்று சூறாவளிப் பிரச்சாரம் நடத்தினார். மலபாரில் சென்ற இடங்களிலெல்லாம், இங்கு அண்மையில் தி. க. வைத் தாக்கிப் பேசினது மாதிரி, முஸ்லீம் லீகை தாக்கிப் பேசினார். நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென்றெல்லாம் காரசாரமாகத் தாக்கினார். அவர் கேரளத்திலிருந்து திரும்பிச் செல்ல காரில் காலெடுத்து வைக்கவில்லை, அதற்குள்ளாக. கேரள காங்கிரஸ் பிரமுகர்கள் முஸ்லீம் லீகோடு கூட்டணி வகுக்கக் குழை