பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதிச் செல்லும் விதியின் கை...! }{}}

டாக்டர் வந்து கிழவரைப் பார்த்தார் ; பரிசோதனை செய்தார். அவரது முகம் ஏனே விகாரம் அடைந்தது. அழகி, உங்கள் மாமாவிற்கு நான் கொடுத்த மருந்தில் யாரோ விஷத்தைக் கலந்து, கொடுத்திருக்கிறார்கள். திரை மறைவில் ஏதோ சூழ்ச்சி நடை பெறுகிறது. கவனியுங்கள், மிஸ்டர் அழகேசன் ” என்று டாக்டர் பயத்துடன் எச்சரித்தார். -

கடல் எழுதி, வில் எழுதித் திட்டப் பெற்ற அஜந்தாச் சித்திரம் அழுதுகொண்டிருந்தது. அழகேசனத் தலை நிமிர்த்திப் பார்த்தாள் அவள்.

அவன் மெளனமே உருவாக நின்று கொண்டிருந்தான்.

டாக்டர் லார், எனக்கு ஒன்றும் மட்டுப்படவில்லை. பணத் தைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். எனக்குப் பரிசாகக் கிடைத்த, ஐயாயிரம் ரூபாயை என் பேரில் பாங்கியில் போட்டிருக்கிறேன். எல்லாவற்றையும் செலவழித்தாலும் சரி, மாமாவுக்கு உயிர் மாத்தி ரம் தந்து விடுங்கள்...!”

‘இப்போது என்னலானதைச் செய்கிறேன். முடிவு ஆண்ட வன் கையில் அம்மா... நாளை விடிந்தால்தான் எதையும் திட்டவட்ட மாகச் சொல்ல முடியும்,’ என்றார் டாக்டர் சுந்தரவதனம்.

ஆலைக் கரும்பாள்ை அழகி.