பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TH 00 ஜாதி ரோஜா

கொள்ளச் செய்த நிகழ்ச்சி அவளுடைய இதயத்தைத் தொட்டு நின் :றது. ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருந்த கஜேந்திரனைச் சந்தித் துப் பேச சசீலாவின் வீட்டுக்கு அன்று சாயந்திரம் வருவதாகச் சொல்லியனுப்பியதை அழகி மறக்கவில்லை.

‘ அம்மா, அம்மா ...பெரிய எசமானுக்கு மறுபடியும் மயக்கம் வந்திடுச்சுங்க அம்மா...’ என்று பதட்டத்துடன் செய்தி சொன்னுள் வேலைக்காரி வள்ளி. -

“ சின்னவர் இருக்காரு ? இல்லை, ஜவுளிக் கடைக்குப் போயாச்சா, பாரு, வள்ளி !”

“ மேலே தானுங்க இருக்காங்க, அம்மா !” அழகி ஓட்டமாக ஒடிஞள், கிழவர் சோமநாதன் படுக்கையில் சுருண்டு கிடந்தார். முகத்தில் சலனம் இல்லை. ஒதுங்கிப்போய் விட்ட கண்கள் மூடியவை மூடியவாறே இருந்தன.

“வள்ளி, நீ, போய்ச் சுடு தண்ணtர் வை; நான் டாக்டருக்குப் போன் செய்கிறேன் ...’ என்று சொல்லி ஹாலுக்கு விரைந்தாள் அழகி, எல்லாம் முடிந்து திரும்பிய போது, சோமநாதனின் உடல் கிலே அவளைக் கலவரத்திற்குள்ளாக்கியது. ஏதோ விபரீதமான கினேவொன்று நெஞ்சிலிருந்து புறப்பட்டு நினைவில் மிதந்தது. “ஐயோ, மாமா! நீங்கள் இந்த உலகத்தில் இல்லையென்றால், அப்பு றம் இந்த அழகியும் உதிர்ந்து போய்விட வேண்டியதுதான் !’ என்று தன்னுள் புலம்பினுள்.

  • அழகி, அழகேசா !” என்று பெரியவர் முண முணத்தார். இக்கட்டான நிலையில், ஓர் உயிரை ஊசலாட வைத்துக் கொண்டு எந்த விஷப் பரீட்சையையும் செய்ய ஒப்பவில்லை அவள். ஆதலால், உடனடியாக மாடிக்கு ஓடினுள். அத்தான், மாமாவுக்கு ஆபத்து. உங்களைக் கூப்பிடுருங்க,’ என்றாள். -

பருவத்தின் வளப்பத்தில் பதிந்த பார்வை, பதட்டத்தின் ஒலியில் சிந்தை தடுமாறியது. தன் மனைவியைப் பார்த்துக் கொண்டே அறையிலிருந்து வேகமாக வெளியே வந்தான் அழகேசன். வந்த சடுதியில் அவள் மீது மோதிவிட்டான். அவள் நாவடைத்துப் போய்விட்டாள்; புடவையைச் சரிப்படுத்திக்கொண்டு துரிதமுடன்

நகர்ந்தாள். - -

அழகேசன் படி யிறங்கின்ை. - அழகி அவனைத் தொடர்ந்த சமயம், அழகேசனின் அறைக்கு வெளியே கடிதமொன்று காற்றில் பறந்து வந்து கிடந்தது. அதை கலியாமல் எடுத்துப் பார்த்தாள். திகைத்துப் போனுள். அடுத்த விடிை, கீழே ஒடிவிட்டாள்.