பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதிச் செல்லும் விதியின் கை......! 9.

அவரிடம் தனிப்படச் சொல்லியிருப்பதாகத் தெரிவித்தாரே? நானும் அழகேசனும் என்னவோ உயிரும் உடலுமாக உறவு கொண்டிருப் புது போல ஏன் அவர் எழுத வேண்டும் ? எல்லாம் புதிராக இருக் கிறதே?-திரும்பவும் சிந்தித்த அவளுக்குக் கடந்த சம்பவம் ஒன்று. பசுமை காட்டியது. ஒரு சமயம், உறவினர் வந்திருப்பதாகக் கூறி, சுய கெளரவத்தைக் காப்பதற்காக அழகியைக் காப்பி கொண்டு வரும்படி அழகேசன் கெஞ்சியதை அழகி மறக்க முடியாது.

ஒருவேளை, இவர்தான் தமிழ்த் தொண்டு அலுவலகத்துக்குப் போய் இப்படிப் போட வேண்டுமென்று சொல்லி யிருப்பாரோ ?

ஒவ்வொரு வாதப் பேச்சுக்கும் ஒவ்வொரு காரணம் அனு சரணையாக அமைந்து, அவள் மூளைய்ை மேலும் மேலும் குழப்பி துே. -

பிரளய தாண்டவம் ஆடியது பேய் மனம். கிழவர் சோமநாதன் அவர்கள் உண்டு முடிந்து ஒய்வு கொண் டார்.

ஒளுன் வேலிக்கு இழுத்தது ; தவளை தண்ணிருக்குக் கூப்பிட் டி.து. அழகியின் நெஞ்சம இரண்டுங் கெட்ட நிலையில் தவியாய்த். தவித்தது. -

பஞ்சணையில் தாறுமாருகக் கிடந்தன புத்தகங்கள் சில. தனக் குப் பிடித்தமான பத்து நாவல்களை எடுத்து விமரிசனம் செய்திருந் தார் ஸாமர்ஸ்ட் மாகம்.

‘வாழையடி வாழையாகப் பிறக்கும் வாசகர்களிலே எவனே ஒருவனுக்கு நான் எழுதிக்கொண்டிருப்பதாகவே மதிக்கிறேன்’ என்ற புதுமைப் பித்தன் அவர்களின் துணிவுப் பேச்சும் எதிரொ லித்தது. - - . . . .

‘நான் எழுதுகிற கதைகள் அமர இலக்கியம் என்பது அடியே னுடைய தாழ்மையான அபிப்பிராயம். தாழ்மையான அபிப்பிரா யமே இப்படியிருந்தால், உயர்வான அபிப்பிராயம் எப்படி இருக்கும் என்று சொல்லவேண்டியதில்லை யல்லவா ? என்று கூறி அம்ரராகி, விட்ட பேராசிரியர் கல்கி அவர்களது நினைவும் எழுந்தது. -

ஆஹா, இலக்கிய நினைவுகளுக்கு மாத்திரம்தான் இந்த நிம்மதி. சொந்தமாம்..! . . ! . - அழகிக்குத் தரையின் நினைவு வந்தது. தாலி மார்பகத்தில் புரண்டது. பரிசு பெற்றுத் திரும்பும்பொழுது அவளது தாலி நழுவிக், கீழே விழுந்துவிட்டது அல்லவா ? அது சுசீலா, செந்தாமரை, கரி காலன் ஆகிய மூவர் கண்களிலே பட்டது. அந்த மங்கலச் சின் னத்தை அவர்கள் கொண்டு வந்து தன்னிடம் கொடுத்து அணிந்து,