பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ஜாதி ரோஜா

அழகேசனுக்குச் சிரிக்க மாத்திரக்தான் தெரியும். அழகிக்கு அழமட்டுந்தான் தெரியும்.

தண்ணீர் நெருப்பாக உருமாறியது. அழகி முகங் கருகிள்ை நெருப்பெழ நிமிரப் பார்த்தாள். அவள் பார்வையில் என்ன்தான் மந்திர சக்தி இருந்ததோ அவ் வளவு தான்-அழகேசன் மீண்டும் பொசுங்கிக் கொண்டிருந்தான்.

அழகி வேகமாக உள்ளே ஓடினுள். சோமநாதன் படுக் ைக. யில் புரண்டு படுத்தார்.

மாமா, சாப்பிட எழுந்திருங்க...’ என்று எழுப்பினுள். பெரியவர் மெல்ல எழுந்தார்.

அவசரமாகத் திரும்பிய அழகி, வீணை கோபாலய்யரிடம் சொன் ளுள் : வாத்தியார் ஐயா, நீங்கள் வழக்கம் போல சாயந்திரம் வாருங்கள், அத்தான் சொல் நிலையல்ல. மாமாவுக்கும் எனக்கும் இந்த வினை ஒன்றுதான் ரொம்பவும் ஆறுதல் தருகிறது. வாய் பேசத் தெரிந்த என் பேரில் இருக்கிற ஆத்திரத்தை பாவம், வாய் பேசத் தெரியாத அந்த வினையிடம் காட்டுகிறார் என் அத்தான். உங்கள் அன்பு இந்த அபலை மீது என்றைக்கும் இருக்கவேண்டும். உங்களைப் பார்க்கும் போதெல்லாம் என் அப்பாவைத்தான் நான் நினைத்துக் கொள்வேன். இதோ, நான் வினை வாசிக்கிறேன். ‘

உணர்ச்சிப் பெருக்குடன் வெந்த மனம் பேசியது. ‘கல்யாணி காற்று வழியில் மிதந்தது. ஏழைக் குடிலையும் அரண்மனை போல உரைச் செய்யும் தன்மை கொண்டது அது.

அழகேசன் பங்களா சுவர்க்கமாகக் காட்சியளிக்கக் கேட்க வேண் டுமா ? -

வினை உபாத்தியாயர் விடை பெற்றுச் சென் ருர், ஹாலில் நின்றிருந்த அழகி, மாடியை நோக்கினுள் அவளைப்

பார்த்த கையோடு, அழகேசன் உள்ளே மறைந்து கொண்டதையும் கவனித்தாள். - -

கொஞ்ச காலமாகப் பொழுது ஏதோ கொஞ்சம் நிம்மதியாகப் போகுது; அதுக்குள்ளே பழையபடியும் இந்த வேதாளம் முருங்கை மரம் ஏறி டுதே ‘ என்று யோசித்தாள். வீணே ஆசிரியரிடம் இனிப். பாடம் சொல்லித்தர வேண்டாம் என்று அழகேசன் உளறிக் கொட் டிய வார்த்தைகளைக் கற்பனை மூலம் நினைவுக் குழியிலிருந்து தோண்டியெடுத்து சஸ்திர சிகிச்சை செய்யலாளுள். பாதாதி கேசம் வரை நடுங்கியது. தமிழ்த் தொண்டு ஆசிரியர் பரிமேலழகர் என் கதை முழுவதையும் அறிந்தவராயிற்றே ? மேலும், கரிகாலன் வேறு