பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதிச் செல்லும் விதியின் கை... ! 97

அவரைச் சாயல் மாயலாய் ஏற இறங்கப் பார்த்தாள் அழகி. உச்சி வெயிலின் தகிப்பை அவரது முகத்தில் உணர்ந்தாள்.

என்னவோ மாதிரி பேசுகிறீர்களே, ஏதாவது விசேஷம் உண்டா ? ...”*
  • நீ வீணை வாசிப்பதை இப்பொழுது நான் கடைசி முறை யாகக் கேட்கப் போகிறேன் ; வாசியம்மா ! ?
உங்களிடம் மாமா ஏதாவது சொன்னர்களா ? ?

அவர் தங்கமானவராயிற்றே... ! ? * பிறகு. அத்தான் இட்ட சட்டமா இது ’ ‘ அம்மா, நான் இன்று வந்து நாளை போய் விடுபவன். காடோடி. குடும்பத்திலே உனக்கோ, உன் கணவருக்கோ என் ஞல் பூசல் ஏற்பட விரும்பவில்லை ; அதன் காரணமாக உங்களது தாம்பத்தியம் சலனமடையவும் ஒப்ப மாட்டேன்...இஷ்டப்பட்டால், வீணை வாசி அம்மா... ! நான்கே நான்கு மாதங்களில் அற்புதமாகக் கற்றுக்கொண்டு விட்டாய் ! ‘ என்றார். கண்கள் கொந்தளித்தன.

கட்டுப்படுத்தப் பாடுபட்டார் அவர். முடியவில்லை.

ஐயா, சற்று பொறுங்கள். மாமாவிடம் சொல்லி அவருடைய மூடிவைக் கேட்டு வருகிறேன். அவர்கள் தானே உங்களை நியமித் தார்கள் ! ’ என்று குடுகுடுப் ‘புடன் சொல்லி உள்ளே செல்லத் திரும்பினள். அப்போது, கட கட வென்ற சிரிப்போசை அழ கேசன் பவனத்தில் எதிரொலித்தது. யார் சிரித்தது ? விதியா ? விதியாவது, மண்ணுவது , ! -

அழகேசன் மாடிப் படியில் ஒயிலாக நின்று கொண்டிருந்தான். எஞ்சி நின்ற இரண்டு படிக்கட்டுக்கள் கூட அவன் கவனத்துக்கு வரவில்லை போலும் ! . . . .

சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கக் கூட்டம் ஒன்றிலே சிலம் புச் செல்வர் வருணித்த அந்த அரக்கர் சிரிப்பைப் பற்றி இப்போது அவள் நினைத்துப் பார்த்தாள். -

இத்தனை நாளாகப் பெட்டிப் பாம்பாக இருந்த இவருக்கு இப் போது என்ன கிறுக்கு வந்துவிட்டதாம் ?. மாமா என்ற மகுடியை மாத்திரம் ஆண்டவன் என் கண்களுக்குக் காட்டாம்ல் இருந்திருந் தால், அழகேசன் என்ற இந்தக் கட்டுவிரியன் பாம்பு என்றைக்கோ என்னை விழுங்கி ஏப்பம் விட்டிருக்குமே ! -இப்படி மனச் சிலந்தி, வலை பின்னிக் கூடு அமைத்துத் தன்னேயும் அதற்குள் சிறைப் படுத்திக் கொண்டு, பிறகு நெஞ்சு தாளாமல், கண்ணிர் மாளாமல் விம்மி விம்மி அழுதது. -