பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ஜாதி ரோஜா

எந்த ஒரு நல்ல முடிவையும் காட்டத் தயங்கினுலும், நல்ல வேளை யாக அவை அவளுடைய கற்பனை உள்ளத்திற்கு உரம் ஊட்டின; வளப்பம் தந்தன; உண்மை உலகத்தைக் காட்டின. -

அவள் தன்னை மறந்த லயந்தன்னில் இந்நேரம் இருந்தாள். சிரிக்கத் தோன்றவில்லை. சிரிப்பில் அழுகை குரல் கொடுத்தது. கையிலிருந்த மலரை மேஜைமீது வீசிளுள்.

தமிழ்த் தொண்டு அவளுடைய நெஞ்சில் ஏற்றி வைத்த பாரம் இன்னமும் குறையவில்லை; ஒருவேளை, அது நிரந்தரமாகவே நிலைத்து விடுமோ?

மனக் கண்களுக்குத் தீட்சண்யத்தைப் பாய்ச்சி எதிரே நோக்கினுள் அழகி. கூடத்தில் வீணே ஒன்று காட்சியளித்தது. ஒரு கணம் அவள் விழிகளை மூடினுள்; என்னைப் படைத்தவனே, எனக்கு அமைதி தரமாட்டாயா?’ என்று நெஞ்சுருகப் பிரார்த்தித் தாள். இதோ அமைதி, அழகி, அழகி!’ என்று பேசியது மாசில்

இரண்டே எட்டில் பாய்ந்தாள் அவள். விணையை எடுத்துத் கொண்டு வந்து தரையில் உட்கார்ந்தாள். தந்திகளை மீட்டினுள். தமக்கு மாத்திரம் கேட்கும் அளவுக்கு பைரவி ராகத்தை இசைக்கத் தொடங்கின உதடுகள். - -

தாயே ஏழைபால் தயை செய்குவாய்-அம்மா தயாபரி, பூரணி, தாயே... ! தியாகராஜர், சாமா சாஸ்திரிகள், தீட்சதர் போன்ற சங்கீத மேதைகளின் நினைவுகளைக் கிளறி விட்டார் பாபனுசம் இவன். தெய்வ ஸாங்கித்யத்தின் மகிமையை யார் வர்ணிக்க முடியும் !

அவள் பாடும் வீணையாளுள். பாடும் வீணை அவளுள் உரு மாறியது. காதவெள்ளம் உருகி ஓடியது. பெருகி வழிந்த்து !

  • அழகி.அழகி ‘ என்ற குரல் கேட்டது. r - தட்டுத் தடுமாறிக் கொண்டு அவள் விழித்தாள். கண்ணிர் வழிந்தது. கூடத்தைக் கடந்து அவள் நிலைப்படியில் நின்றாள். வினை கோபாலய்யர் வந்திருந்தார். - . வாருங்கள், ஸார். அப்படி ஈலிச்சேரில் உட்காருங்கள் ; காப்பி வரவழைக்கிறேன்.” என்றாள் அழகி. - -

வினை உபாத்தியாயர் அமர்ந்தார்.

&

ம்மா, காப்பி யெல்லாம் வேண்டாம். நீ ஒரு முறை, ஒரே ஒரு முறை வீணை வாசி அம்மா’ என்றார் அவர். - - -