பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதிச் செல்லும் விதியின் கை... ! 95

இவ்வாறு எழுத்துக்கள் ஓடின.

திருமதி அழகி வெறும் அழகி அல்ல; திருமதி அழகேசனுங் கூட. பெயரின் எழிலுக்கு எழில் சேர்க்கும் பாங்குபெற்ற நாவலா சிரியை இவர். காதலொருவரைக் கைப்பிடித்து, அவர் காரியம் யாவிலும் கை கொடுக்கும் புதுமைப் பெண் அழகி. பெண்ணுக் குப் பெண்தான் கண்ணுடியாக அமையக்கூடும். ஆகவே, ஆசி ரியையின் அந்தி நிலா பெண் ஒருத்தியின் உள்ளத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. இதழுக்கு இதழ் நீங்கள் கண்ணிர் சொரிய நேரிடும்; காரணம், கதைக்குரிய நாயகியின் நிலை அப்படி; அவள் படும் அல்லல்கள் அவ்வாறு. கொண்டவனுக்கும் கொண்டவளுக்கும் இடையே திருமணப் பந்தலிலேயே திரை போட்டு வேடிக்கை பார்க்கிறது விதி. தன்னம்பிக்கை கொண்ட வள் அவள். எமர்ஸ்னின் கொள்கையில் அவளுக்கு ஈடுபாடு. விதியை மறுக்கிருள். ஆனல் விதியோ அவளை மடக்குகிறது. முடிவுதானே...? ஆமாம், காத்திருத்து சுவையுங்கள்!...திருமதி அழகி அவர்களின் தாம்பத்தியம் சிறக்கவும், அவர்களது இலக்கியப் பணி வளம் பெறவும் வாழ்த்துகிருேம்.

ஆசிரியர்.

எங்கிருந்தோ மிதந்துவரும் காற்று எங்கேயோ இருக்கின்ற சாளரத்தின் கதவுகளைத் தொட்டுப் பார்த்து விளையாடுவதில்லையா? அம்மாதிரிதான் இந் நிகழ்ச்சியும் நடந்திருக்கிறது. இலக்கிய உள்ளத்தை விளக்க வேண்டிய ஆசிரியரின் பேணு, அந்த வரம்பை யும் தாண்டி விட்டிருக்கிறதே என்பதை எண்ண் எண்ண அவளுக்கு மனம் நிரம்பி வழிந்தது-ஆனந்தத்தால் அல்ல-ஆத்திரத்தினுல். ஏன் இந்தக்காற்று வீச வேண்டும்? ஏன் அவளது மனச்சாளரம் பட பட வென்று இப்படி அடித்துக்கொள்ள வேண்டும்? ஏன் இவ்வாறு அத்துமீறிய அறிமுகத்தில் பரிமேலழகர் இறங்க வேண் டும? காற்று, வீசுந்தென்றல் அல்லவே?-சூறைக் காற்றா அது? எழுதிச் செல்லும் விதியின் கைடா அது ? எழுதி எழுதி மேற் சென்று விட்டதா? இல்லை, செல்கின்றதா?

பரிசளிப்பு விழாவில் என்னே பொதுவாக-அதாவது, இலக்கிய ஆர்வம் படைத்த பெண் என்ற அளவில் மட்டிலுந் தானே அறிமுகம் செய்வித்தார்?......ஆனல் இப்போது .....? என்று எண்ணிப் பார்க்கத் துணிந்த அழகிக்கு அதற்கு மேலே நினைக்கத் திடம் இல்லை. - - -

தடம் புரண்டு கிடந்த சேலைத் தலைப்பைச் சீர்படுத்திக் கொள் ளப் பணித்தது அழகியின் சுய நினைவு. பெருமூச்சும் கண்ணிரும். அவளுக்குப் புதிதல்ல; அவை அவளுடைய பிரத்தியட்ச வாழ்விலே