பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. எழுதிச் செல்லும் விதியின் கைஎழுதி எழுதி மேற்செல்லும்...... !

- -

தமிழ்த் தொண்டு ஆண்டு மலர் தபாலில் வந்திருந்தது. இலக்கிய நெஞ்சம் தூண்டிய ஆர்வத்துடன் அழகி மலரைப் புரட் டிக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்ணுேட்டம் பக்கங்களின் மீது மேலோட்டமாக ஊர்ந்தது. எழுத்துலகிலே தனி இடம் அமர்த்திக்கொண்டிருக்கின்ற பேணு மன்னர்கள் பலருடை பெயர் கள் அவளது விழி விரிப்பில் மோதின; விலகின. அவரவர்களின் கதை, கட்டுரை, கவிதைகளுக்குக் கீழே அவரவர்களைப் பற்றிய குறிப்புக்கள் வேறு வெளியிடப்பட்டிருந்தன. பரிமேலழகர் புதுமையை விரும்புவரென்பதை அழகி ஏற்கனவே அறிந்திருந்தாள். இப்போது அதற்கு அத்தாட்சியாக அமைந்தது தமிழ்த் தொண்டு’ *

ஒரு பகுதியில் தமிழ் வளர்க்கும் காவலர்கள் பலரின் நிழற். படங்கள் அச்சாகியிருந்தன. ஏடுகள் புரண்டன. அழகியின் கண் கள் நிலைத்து கின்றன. அவளுடைய இதயத்தின் அடிவாரத்தில் சிற்றலை பரப்பிய ஓர் இன்ப உணர்ச்சி அவளது கண்களின் விளம் பிற்கு மிதந்து வந்தது. இமைக்க மறந்தன கண்கள். ஆணுல், மனம் எண்ண மறக்க முடியுமா?

ஐயாயிரம் ரூபாய் பரிசுபெற்ற அழகியின் நவீனம் அந்தி நிலா ஆரம்பமாகியிருந்தது. நெஞ்சம் புனேக்த கதை உறுப்பினர்களை ஓவியர் எவ்வாறு படம் பிடித்துக் காட்டிருக்கிருரென்று பார்க்கத் துடி துடித்தாள். ஆனால், அதைவிடப் பதட்டம் ஏற்படத்தக்க ஒரு கினேவுக் குறிப்பை உள்மனம் அறிவித்து விட்டது.

தன்னை ஆசிரியர் எப்படி அறிமுகப்படுத்துகிறார் என்ற விவ. ரத்தை அறிய ஆவல் கொண்டாள். ஆகவே, நவீனத்தின் முதல் அத்தியாயத்தின் கீழ்ப்பகுதிக்குப் பார்வையை இறக்க வேண்டியவ. ளாள்ை.அழகி.

இதயம் எண்ணங்களுக்குச் சுமைதாங்கி; அப்போது அது காற்று கிரம்பிய பலுளுகவும் மாறிவிடும். அழகி பேருமூச்செறிந் தாள். அதன் வெம்மையில், சூடு கண்டாள்; சுவையும் காணத் தவறவில்லை. அதாவது, அந் நிலைக்கு ஆசிரியர் அவளை ஆளாக்கி யிருந்தார் என்ற அர்த்தம்.