பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆம் , அழகிக்கு ஓர் அயோத்தி ! 93

  • அழகி, என்னுடைய உறவினர் இருவரும் ஒன்றுவிட்ட தம்பியும் வந்திருக்கிறார்கள். நீ கதாசிரிய்ை என்பதை அறிந்து உன்னைப் பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். காப்பி மாத்திரம் தயார் செய்துகொண்டு வா. என் கெளரவத்தைக் காப் பாற்று. அழகி, நான் புது அழகேசன். இது சத்தியம்...! ’ என்று பச்சைப் பாலகன் மாதிரி செருமிஞன்-முப்பது வயது ஆண் பிள்ளை.

அவர்கள் வந்தார்கள். வணக்கம் தெரிவித்தார்கள். பதில் வணக்கம் சொன்னுள். பிறகு காப்பி கொணர்ந்தாள். இலக்கியப் பயிற்சி பற்றிப் பத்திரிகை நிருபர்கள்போல அவர்கள் கேட்டகேள்வி களுக்குப் பதில் செர்ல்லக் கூடியவற்றுக்கு மட்டும் விளக்கம் தெரி வித்தாள். அவர்கள் போய் விட்டார்கள்-அழகேசன் உள்பட.

இதயம் கனியப் பெருமூச்சு விட்டவாறு கட்டிலில் வந்தமர்ந்த அழகி, அப்படியே கொத்துங் குறையுமாகப் படுத்துத் தூங்கி விட் உாள். யாரோ தன்னைத் தொட்டதறிந்து அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்தாள் அவள். -

அழகேசன் கண்ணிருடன் நின்று கொண்டிருந்தான். அழகியின் கைகள் மூளியாக யிருந்தன. ஒரு நாள் ஜவுளிக்கடையில் கிடக் தெடுத்த அந்த ஒற்றை வளையின் ஞாபகம் உண்டானது. மற் றொரு வளையல் எங்கே ?-சிந்தை தடுமாறியது !

‘கண்ணே என் நிலையை இன்னுங்கூட உன்னுல் புரிந்து கொள்ள முடிய வில்லையா ? அழகி, நான் உன் கணவன் அல் லவா ? அழகி.!” என்று கேட்டுக் கொண்டே, அழகியை நெருங் கின்ை அழகேசன்.

புயல் வெறியாட்டம் ஆடத் தளம் பரப்புமுன்னர், தென்றல் கதறியது: “ஐயோ!...மாமா!...மாமா !...” - விசித்தெழுந்த சோமநாதன் விசையாக ஓடிவந்தார்; வழியில் இருந்த கூடத்துக் கதவு தடுத்தது. அவர் நிலை குப்புறச் சாய்ந்து விட்டார். அவர் அழகி, என்னம்மா நடந்தது ?” என்று தேய்ந்த குரலில் விசாரித்தார். - - - - அழகி பதில் எதுவும் சொல்லத் தெம்பின்றி, சோமநாதனின், நெற்றியில் வழிந்த ரத்தத்தைச் சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்களிலே தீப்பொறி பிறந்தது.

பாவம், அழகேசன் சாம்பராகிக் கொண்டிருந்தான்..!