பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ஜாதி ரோஜா

களும் செய்தி கேட்டு சந்தோஷம் கொண்டார்கள். முன்பு ஒரு நாள் உன் கணவர் தனக்குத் தானே சொல்லிக்கொண்ட வார்த்தைகளே நான் உன்னிடம் சொல்லி யிருந்தேன். இப்பொழுது திரும்பவும் ஞாபகமூட்டுகின்றேன். அழகி வந்தவர்கள் போனவர்களிடம் என் கெளரவத்திற்காக இப்படி எத்தனை நாளேக்குத்தான் பொய் சொல் லித் தப்பிக்க முடியும் ?. நாம் இரண்டு பேரும் புருஷன்-மனைவி யாக ஆகவே முடியாதா ?...” என்று அழகேசன் மனம் நொந்து சொன்ன் சொற்களை நான் மறக்க முடியவில்லை. யேல்லவா மறக் காமலிருக்க வேண்டும் ?. பெண்ணுக்கென நம் தமிழ்ச் சமுதாயம் அமைத்துக் கொடுத்திருக்கும் கட்டு திட்டங்கள் மிக அதிகம் ; ஆனல் நியதிக்கு உட்பட்ட சுதந்திரங்களோ மிகக் குறைச்சல். ஆம் ; நீ வாழவேண்டும்-உன் கணவருடன். நீ சிரித்து மகிழ. வேண்டும்-உன் புருஷனுடன். இதுவேதான் எங்கள் எல்லோ ருடைய ஆசையாகும். தெய்வம்போல ஒரு மாமனுர் உனக்குக் கிடைத்திருக்கிறார்; ஆகையால் உன் சந்நிதானத்தில் அழகேசன் பேயாக மாறி அடியெடுத்து வைக்க இசையமாட்டார் ; பேயை, இதயமுள்ள நல்ல மனிதராக உருமாற்றிய பிறகுதான் உன் கண். னில் தென்பட வைப்பார். இனியாவது சிரி, அழகி 1 ஆமாம். வாய் திறந்து மின்ம் திறந்து அற்புதமாகச் சிரி, அழகி. நீ பரிசு பெற்ற ஐயாயிரம் ரூபாய் செக்கை சுசீலா அக்காவிடமிருந்து பெற்றுக் கொள். நாங்கள் டோய் வருகிருேம், ’’ என்றாள் தாமரை.

அழகியால் அழத்தான் முடிந்தது. பெண் அழும்போது மட் டும் அவளுடன் சேர்ந்து யாருமே அழமாட்டார்கள்.

மத்தியான்னம் சாப்பாடு முடிந்ததும் சோமநாதன் பின்கட்டில் நிம்மதியாகத் துங்கிக் கொண்டிருந்தார். அழகேசன் ஸில்க் எம் இபாரிய த்தில் களவு போன விஷயமாக போலீஸ் ஜீப் இரண்டு முறை அழகேசனைத் தேடி வந்தது. இது விஷயமாக அவனுக்கு வெளி வேலைகள் இருந்தன. வள்ளியின் கணவனுக்கு உடம்பிற். குச் சுகமில்லை. அவளும் போய்விட்டாள். ஆகவே, அழகி மாத். திரம்தான் பாக்கி. -

பிள்ளையார் சுழி போட்டிருந்த புதிய கதையைத் தொடங்க எண்ணி, வெள்ளைத்தாளும் வெள்ளை உள்ளமுமாகக் கட்டிலில் வந்து உட்கார்ந்தாள். நாவலாசிரியை அழகி. - - -

“அழகி 1. அழகி ‘ என்று கூப்பிட்டுக்கொண்டே அழகே சன் வந்தான், - . . . .

அவளுக்கு மேனி சிலிர்த்தது.