பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. யார் இந்த முரளி ...?

நல்ல பொழுதாக விடிய வேண்டுமே யென்று கற்பகாம்பா 2ளத் தியானித்து விட்டுப் படுத்துக் கொண்டாள் அழகி. நாம் ஒன்று கினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்று சாதாரணமாகப் பேசிக் கொள்ளுவார்கள். ஆணுல், அழகியைப் பொறுத்தவரையில் அவள் நினைத்ததற்கு அந்தப் பெண் தெய்வம் ஒன்றும் எதிர்ப்புக் காட்டவில்லை. ஒருவேளை, பெண்ணுக்குப் பெண் ஏற்படும் இன உணர்ச்சியோ, என்னவோ ? அவள் பிரார்த்தித்துக் கொண்டதற்கு இணங்க, அடுத்த நாள்ப் பொழுது நல்ல பொழுதாகவே விடிந்தது. வாரிச் சுருட்டிக்கொண்டு படுக்கையை விட்டு எழுந்தாள் அழகி. கண்களைத் துடைத்துக் கொண்டாள் ; எதிரே பார்த்தாள். அவளுடைய மாமளுர் சோமனுதன் கட்டிலிலே புரண்டு படுத்தார். அண்டிச் சென்றாள். அசதியும் ஆற்றாமையும் அவரிடம் இருந்தன. அவளது நெஞ்சு படபடத்தது.

படுத்திருந்த ஜமக்காளத்தை மடித்துப் போட்டாள். அழகே சன் விலாசத்தின் அந்தப்புரம் அவளை அழைத்தது. போனுன் ; திரும்பினுள். இப்பொழுது, சுட்டும் விழிச்சுடரிலே அழகு கொழித் தது. நெற்றித் திலகத்தில் பக்தி கனிந்தது. தாயே, கற்பகாம் பிகை, என் மாமாவைக் காப்பாற்று, என்று தியானம் செய்தன அவளுடைய உதடுகள்.

சிங்காரத் தொட்டிலில் கண்கவரும் பச்சைக் குழந்தை தன்னை மறந்து சிரிப்பது மாதிரி, இளம் பரிதி செவ்விதழ்களைப் பிரித்துப் புன்னகை புரியத் தொடங்கியிருந்தான். ஞாயிறு போற்றுதும்...!”

அழகி, பூஜை அறையைத் தாண்டி மறுபடியும் கூடத்தின் உள்ளே நுழைந்தாள். இன்னமும் பெரியவர் கண் திறக்கவில்லை. அவர் உடம்பெல்லாம் வியர்வைத் துளிகள். சேலைத் தலைப்பினுல் ஒத்தி எடுத்தாள். விசிறி அவள் கெக்குத் தாவியது. . . .

‘அம்மா, சுடுத்தண்ணி கொண்டாந்திருக்கேங்க, அம்மா,’ என்று செய்தி சொன்னுள் வேலைக்காரி வள்ளி. வெந்நீர்க் கோப் பையை ஸ்டுலில் இறக்கி வைத்துவிட்டுக் கிழவரைப் பார்த்தாள்.

‘அம்மா, ஐயாவுக்குக் காச்சல் விட்டுப்போச்சு போலேயிருக் குங்க,’ என்றாள் வள்ளி. கிஜமாகவா ?”