பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் இந்த முரளி...? 103

“ஆமாங்க, வேர்வை வர ஆரம்பிச்சிட்டுஇன்ன, அப்பாலே ஒண்னும் பயமில்லேன்னு எங்க காவேரிக்கரைப் பாட்டி சொல்லு வாங்க !’ -

கிட்டத்தட்ட ஐநூறு ரூபாயை ஏப்பம் விட்ட அவ்வளவு பெரிய வியாதியை வேலைக்காரி அவ்வளவு லகுவாக ஒட்டிவிடப் பார்த்தாள். -

ஏழையின் வாக்கு பொய்க்காமல் இருக்கவேண்டுமே யென்று நினைத்தாள் அழகி. சோமநாதனின் கட்டிலே யடைந்து, ‘மாமா !” என்று மெல்லக் கூப்பிட்டாள். அடித்துப்போட்டாற் போலக் கிடங் தார் அவர். பேச்சில்லே , மூச்சிருந்தது.

உள்ளும் புறமும் அவளுடைய கண்கள் அலேந்தன. டாக்ட ரைத்தான் அப்பொழுது அவள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். முதல் நாள், இப்போது என்னுலானதைச் செய்கிறேன் முடிவு ஆண்டவன் கையில், அம்மா !” என்று சுந்தரவதனம் எச்சரித்ததை நினைவு சேர்த்துக் காட்டியது அபலை நெஞ்சம்.

கடந்த இரண்டு மாசமாக இந்த டாக்டர்தானே என் நெஞ்சி லிருந்த பயத்தை விலக்கிக்கொண்டிருக்கிறார் என்னுடைய பயத் தை ஒரு நாள் டாக்டரிடம் ஆதியோடு அந்தமாக விளக்கிச்சொன் னதைக் கேட்டதும், அவர் அப்படியே திகைத்து விட்டாரே !

‘அழகி அம்மா, உங்கள் கதை விசித்திரமாகத்தான் இருக் கிறது. அழகேசனைப்பற்றி நீங்கள் சொல்லும் கதையைக்கூட என்னுல் அவ்வளவு தூரம் லேசில் நம்பிவிட முடியவில்லை. அதற் காக, உங்கள்_பேச்சை நம்ப மறுக்கிறேன் என்பதாகத் தயவுசெய்து நினைத்துவிடாதீர்கள். தொட்டுத் தாலிகட்டிய உங்கள் கணவரிட் ழிருந்து நீங்கள் பாதுகாக்கப்பட_உங்களுடைய மாமனுர்தான் இப் போது முள்வேலியாக அமைந்திருக்கிறார் என்று சொல்கிறீர்கள். ஆகவே, பெரியவருக்கு எவ்விதமான குந்தகமும் வாலாகாது என் றும் ஆசைப்படுகிறீர்கள். நான் மூன்றாமவன், உங்களுடைய குடும்ப டாக்டர் என்ற உரிமை இருந்தாலும், உங்களது குடும்ப நோய்க்கு நாடி பிடித்துப் பார்த்து வைத்தியம் செய்யும் உரிம்ை எனக்குக் கிடையாது; அது வேண்டவும் வேண்டாம். ஆளுல் ஒன்று மட்டும் சொல்வேன். உங்கள் விருப்பப்படி, ஸ்ரீமான் சோம நாதன் அவர்களின் உடம்பு நலம்பெற்று தேறச்செய்வதற்கு நான் பொறுப்பு 1 என்று மென்று விழுங்கிப் பதில் சொன்ன டாக்டர் நேற்று ஏன் அப்படி ஒட்டாமல் கொள்ளாமல் பதில் சொன்னர் ?... மாமாவுக்கு அவர் கொடுத்த மருந்திலே யாரோ விஷத்தைக் கலந்து, கொடுத்து விட்டிருப்பதாகச் சந்தேகப் பட்டாரே ?...யார் செய்த சூழ்ச்சி அது ? ஒரு வேளை...ஒரு வேளை...’ என்ற வரம்புவரை