பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் இந்த முரளி... ? 105

போல விஷத்தைக் கலந்து விட்டிருப்பாரோ ?...ஏன், எனக்கு மாமா பாதுக்ாப்பளிக்கிருரே என்ற ஆத்திரமா ? ஐயோ, என்ன கொடுமை இது ! நெஞ்சிரக்கமற்ற பிண்டமா இவர் ? இதயம் என்ற ஒன்றைப் படைக்கவே மறந்து விட்டானே ஆண்டவன் !

மறுபடியும் ஓயாத ஒழியாத சிந்தனைக் குமைச்சல். அக்கினிப் பாளத்தில் கால் பாவி நின்றாள் அவள். சுட்டது, சுட்டது, சுட்டுக் கொண்டே யிருந்தது.

தேடி வந்த தெய்வமாக டாக்டர் தோன்றினர். ஒடிப் போய், :: வாங்க, லார் ‘ என்று வரவேற்றாள். வள்ளி, வள்ளி , ‘ என்று கூவினுள். வேலைக்காரியைக் காணுேம். மருந்துப் பையை வாங்கிக் கொண்டாள்.

டாக்டர் சோதனை செய்தார். அவருடைய கழுத்தில் தொங் கிய ஸ்டெதஸ்கோப் பில்தான் தன்னுடைய உயிர் அடங்கி யிருப்பது போன்ற ஒர் உணர்வுடன் டாக்டரின் முகக்குறிப்பையே பார்த்தவாறு நின்றாள் அழகி. -

டாக்டரின் உதடுகளில் சிரிப்பு உதித்தது. அம்மா, நல்லவர் களின் நம்பிக்கை ஒருபோதும் விணுவதில்லை. உங்கள் மாமா இனிப் பிழைத்துக் கொள்ளுவார்கள். நேற்றுச் செலுத்திய ஜெர்மன் ஊசி கைமேல் பலன் காட்டி விட்டது,” என்றார். , -

என் உயிர் பிழைத்தது, டாக்டர் ஸார் ‘ என்றாள் அழகி. கண்கள் இரண்டினையும் மூடிக்கொண்டே இவ்வாறு சொன்ள்ை. அவள் விழிகளைத் திறந்தபோது, கண்ணிர் வெள்ளம் வழியத் தொடங்கியது. -

வள்ளி காப்பி கொண்டு வந்தாள். டாக்டரிடம் நீட்டினுள். * அம்மா, சின்ன ஐயா வெளியூருக்குப் போயிட்டாங்க. முன்ஞ்லே நடந்ததில்லே, ஜவுளிக் கடை கேசு, அது விசயமாம்!” என்றாள் அவள்-அழகியிடம்.’ - - - - -

இந்தச் சேதி அழகிக்கு அதிர்ச்சியாக இருந்தது. பெற். றெடுத்த தகப்பனுருக்கு உடம்புக்கு முடியலே. அதைக்கூட என்ன ஏதுன்னு கேட்காத பாவி மனுஷர் வெளியூர்ப் பயணம் வேறே வச்சிட்டாரே ?

அழகேசனின் நடவடிக்கைகள் அனைத்தும் மூடுமந்திரம் போலவே இருந்துவந்த விஷயம் அவளுக்கு இன்று நேற்றைய ரகசியமல்லவே ! - . . . . . . . . . . சுந்தரவதனம் மருந்துப் பில்லைகள் அடங்கிய பொட்டலம் ஒன் நையும், கலக்கப்பட்ட தண்ணீர் மருந்து நிறைந்த சீசா ஒன்றையும்