பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் இந்த முரளி... ? 107

எதுவும் ஏற்படாமல், நல்ல பலனையே காணமுடிந்தது. அப்படி யென்றல், ஏன் இந்தப் பரிவுணர்ச்சி ? அழகேசன் வெளியூர் சென்று விட்டானே யென்றா ? பூ...நல்ல வேடிக்கை -அவ ளுக்கு நினைவுகூட்டிப் பார்க்கவும் சிந்தை இல்லை.

தனிமையைப் போக்கத் துணை நாடினுள் அழகி. பேசாத வினையைத் தேடினுள். கடிதம் ஒன்று தட்டுப்பட்டது. பழைய கடிதம் அன்று தன் மாமனுருக்கு உடல் நலமில்லையென்று தன் கணவனே அழைக்க மாடிக்குப் போய்த் திரும்புகையில், பாதத்தில் தஞ்சம் அடைந்து பேசிய கடிதம் அது. இப்பொழுது பேசச் சொன் ளுல் மாத்திரம் பேசாமல் இருந்து விடுமா ? . -

‘திருவாளர் அழகேசன் அவர்களுக்கு, . முன்பின் அறிமுகமில்லாத ஒருவன் எழுதும் கடிதம் இது. ஆணுலும், உங்களுடைய வாழ்க்கையில் அக்கறை கொண்டவன் எழுதுகிறேன். வியாழக்கிழமை பகல் பன்னிரண்டு மணிக்கு மவுண்ட் ரோடில் உள்ள ஹோட்டல் பூலோக சொர்க்க த்திலே நாற்பத்தொன்பதாவது அறையிலே என்னைச் சந்தியுங்கள், சில ரகசியங்களை-உங்கள் வாழ்வு சுமுகமாக அமைவதற்கு நீங்கள் எச்சரிக்கையோடு கண்காணிக்க வேண்டிய மர்மச் சுழல்களைஉங்களுக்கு விளக்குகிறேன். ஆச்சரியமாக யிருக்கிறதா ? மற்றச் செய்திகள் நம் சந்திப்பில் விளக்கப்படும் ! -

இப்படிக்கு, முரளி.” அழகி தன் மனத்தைக் கேள்வி கேட்டாள் ; ஆமாம், யார் இந்த முரளி ? என் அத்தான் முரளியா இவர் யாரைப் பற்றி என்ன ரகசியங்கள் அப்படித் தெரியுமாம் முரளி அத்தானுக்கு? ஒருகால், என்னே வஞ்சம் தீர்க்க அத்தான் முரளியும் இவர் மாதிரி. ஏதாவது சதி நடத்தப் போகிரு.ரா...? ஆ, இன்றைக்குத்தானே வியாழக்கிழமை ? ? - .. . . - :, : அழகேசனின் கவனத்தைக் கவர்ந்து, பிறகு நினைவுபடுத்த மறந்த அக்கடிதத்தை மடித்து மேஜை டிராயருக்குள் திணித்தாள் அழகி. அந்தப் பூலோக சொர்க்கத்தின் போன் எண்னேக் கான டெலிபோன் டைரக்டரியைத் தேடினுள். கிடைத்தது. ஏடுகளைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அவள் முன்னே அவளது அத்தான் முரளி நின்று கொண்டிருந்தான் !