பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகி ! இதோ, எரிமலை... புயல்... பூகம்பம் 119

‘ ஆமாம்.’’ என்று அழுத்தந் திருத்தமாகப் பதில் விடுத்தாள் அவள். - -

‘ நானேதான். ‘ - - ‘ ஆ, நீங்களா ? ‘ என்று அலறிஞள் அழகி. குருதிக் குழல் களின் ரத்தம் அவ்வளவும் அப்படி அப்படியே-ஆங்காங்கே உறைந்து குளிர்ந்துவிட்டது. -

“ மாமா, எனக்காக நீங்கள் அவரை ஏன் கொடுமைப்படுத்த வேண்டும் ? இப்போதே மவுண்ட் ரோட்டுக்குப் புறப்படுவோம், வாருங்கள். அவரைக் காப்பாற்ற வேண்டாமா ?...”

  • அன்றைக்கு ஒருநாள் காலையில் நான் உனக்கு எச்சரித் தேனே, அழகேசனுக்காக நீ துளி கண்ணிரைக்கூட வீணடிக்கக் கூடாதென்று ... மறந்துபோனுயா ? “ என்று ஆத்திரத்துடன் சொல்லிவிட்டுப் படுக்கையில் படுத்துக்கொண்டார் அவர்.

அப்படியேன்றால், நீங்கள் அவரைக் காப்பாற்ற முடி யாதா ?...சரி, இதோ இப்பொழுதே கான் ஒருத்தியாகவே போகி றேன். அவர் உங்கள் மகன் என்பதற்காக அல்ல ; அல்லது, அவர் எனக்குரியவராக ஆக்கப்பட்டாரே என்பதற்காகவும் அல்ல ; பாவம், ஒரு மனிதர் வீணுக நரக வேதனைப் படுகிருரே என்ற பரிதாப உணர்ச்சியினல் உந்தப்பட்டுத்தான் அவருக்கு உதவப் போகிறேன்...! ‘ என்று கூறி முடித்ததும், விருட்டென்று வெளி யேறினுள் அழகி. - -

அப்போது, சோமநாதன் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தார்.

அழகி, கில் உன் அத்தான் இந்நேரம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டிருப்பான் ... ‘ . . . . . . .

புதிய குண்டல்லவா இது ? தங்கப்பதுமை வெள்ளியானது. . காற்றாேடு கலந்த நினைவுச் சிதறலொன்று குரல் கொடுத்தது. சோமநாதன் என்னவோ சொல்ல வேண்டுமென்றாரே...?

அழகி விடாப்பிடியாகக் கேட்டாள். ... -

முதலில் போய்ப் படுத்துத் தூங்கு. தன்னலே எல்லாம் தெரியும்,’ என்ற பதில்தான் கிடைத்தது-அவளுக்கு.

செவிடுபட அலறிக்கொண்டிருந்தது ஆந்தை. - அழகி அங்கிருந்து கிளம்பினள். . . . . . . . . இந்தாம்மா, புதிய புத்தகம் இது. எடுத்துக்கொண்டு T படி அழிகி ‘ என்று கூறி, புத்தகம்ொன்றை நீட்டினர் சோமநாதன். அவருடைய கை நடுங்கியது. . . . . . -- -